ரிஷியும்
”உன் தங்கச்சி மனசுல நான் இருந்தா எனக்கு கட்டிவைச்சிடுவியா” என வில்லங்கமாக கேட்க தாத்தா உடனே ரிஷியிடம்
”போட்டியில யார் ஜெயிக்கறாங்களோ அந்த பொண்ணுதான் உனக்கு புரியுதா. இது ஒருவேளை நந்தினியா கூட இருக்கலாம் இல்லாமலும் போகலாம் யார்கண்டா சொல்லு இப்பவே எதையாவது நினைச்சி ஆளாளுக்கு கற்பனை கோட்டை கட்டிவைக்காதீங்க சொல்லிட்டேன் ஒழுங்கா இருங்க கருணா தினா ரெண்டு பேரும் லீவுல இருந்தது போதும் கம்பெனிக்கு போய் வேலையை பாருங்க அர்ஜூன் இங்கதான் இருப்பான் அவனால கம்பெனிக்கு வரமுடியாது” என தீர்த்து சொல்லவும் அனைவரின் முகமும் வாடிப்போனது.
தாத்தாவோ அவர்களைப்பற்றி கவலைப்படாமல் போட்டியை ஆரம்பித்தார்.
”சோனா வாம்மா வா என்ன செஞ்சிருக்க” என கேட்க அவள் காலையிலயே ஸ்பைசி ப்ரைடு கேபேஜ் கூடவே பாஸ்தாவும் செய்திருந்தாள். ரெண்டுமே சுட சுட இருக்க அதை அனைவருக்கும் பரிமாறினாள்.
மிகவும் ருசியாக இருந்தது. இருந்தாலும் தாத்தா அவளிடம்
”அம்மாடி டிபன் சூப்பர்மா என்ன மசாலா கொஞ்சம் அதிகமா இருக்கு குறைச்சிக்க சரியா”
“சரிங்க தாத்தா”
“பரவாயில்லைம்மா வர வர உன் சமையல் சூப்பராயிருக்கு” என மோகனசுந்தரம் சொல்ல
“தேங்ஸ் அங்கிள்”
என சொல்லிவிட்டு அவளும் சென்றமர்ந்து சாப்பிட்டாள்.
அடுத்து வந்தனா நந்தினி இன்று பொங்கல் செய்கிறாள் என தெரிந்துக்கொண்டு