(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

என கேட்க அவளும் ஒரு மார்க்கமாக தலையை ஆட்டிக்கொண்டே வந்து பரிமாறினாள்.

   

அவள் வைத்த புளியோதரையைப்பார்த்தவருக்கு சிரிப்பே வந்தது.

   

”என்னம்மா இது”

   

“தாத்தா அது கேப்சிகம் உடம்புக்கு நல்லது வெறும் சாதமா இருந்திச்சி அதான் கேப்சிகம் கொஞ்சம் போட்டேன்”

   

“ஆனா புளியோதரையில யாரும் இப்படி சேர்க்க மாட்டாங்களே”

   

“மாட்டாங்கதான் நான் புதுசா வித்தியாசமா செய்யலாம்னுதான் செஞ்சேன் தாத்தா”

   

“சரி சரி” என தலையாட்டிவிட்டு சாப்பிட ஆரம்பித்தார். நல்லவேளை சாதம் நன்றாக ஊறியிருந்தது. அவள் அதில் கேப்சிகம் போட்டதால் காரத்துடன் சிறிது மிளகு தூளும் போட்டிருந்தாள். கார சாரமாக இருந்தாலும் சுவையாக இருந்தது. அவர்

   

”நல்லாயிருக்கும்மா கொஞ்சம் காரம் தூக்கி அடிக்குது ஆனாலும் நல்லாயிருக்கும்மா” என சொல்ல அவள் மிகவும் சந்தோஷப்பட்டு அனைவருக்கும் பரிமாறினாள்.

   

தாத்தாவே நல்லதாக சொன்னதால் மற்றவர்களும் நிம்மிதியாக சாப்பிட்டனர்.

   

அடுத்து வந்தனா வந்தாள். அவளுக்கு கிராமத்து சமையல் என்பதால் ஈசியாக சமைத்திருந்தாள்.

   

அதிலும் அவர் சொன்ன திருவாதிரை களியும் வெண்டைக்காய் போட்ட மோர்குழம்பும் செய்திருந்தாள்.

   

காலையில் பொங்கலில் சொதப்பிய காரணத்தால் வந்தனா இந்த ரெண்டு டிஷ்ஷையும் சரியாக செய்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.