”அண்ணா அவளை கவனமா பார்த்துக்க நானும் இருக்கேன் நீங்க போய் உங்க வேலையை பாருங்க” என சொல்லவும் ரிஷி
”நீ மட்டும் ஏன்டா தனியா இருந்து கஷ்டப்படனும் நான் உனக்கு உதவி செய்றேன்”
“தேவையேயில்லை வாங்க போலாம்”
“எங்கடா”
“ஒரு முக்கியமான இடத்துக்கு நைட் டின்னருக்கு வரலாம் வாங்க” என சொல்லிவிட்டு அவனை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.
தாத்தாவும் நந்தினியிடம் தைரியத்தை வரவழைக்கும் புக்கையும் மருமகளுக்கான புக்கையும் தந்துவிட்டு இன்னொரு புக்கை சுசித்ராவிடம் தந்து
”இந்த புக்கை உன் அத்தை கிட்ட கொண்டு போய் நான் கொடுத்ததா சொல்லிக்கொடு என்ன செய்றாள்னு பாரு புக்கை தூக்கியெறிஞ்சாள்னா கொண்டாந்து நீயே வைச்சிக்க உனக்கு வரப்போற மருமகளுக்கு ஆகும்” என சொல்லித்தரவும் சுசித்ராவும் சிரித்தபடியே பாட்டியை தேடி சென்றாள்.
பாட்டியும் அந்த புக்கை பார்த்துவிட்டு 1 மணி நேரம் தாத்தாவை திட்டி ஓய்ந்து ஓய்வு எடுக்க ஆரம்பிக்கவும் அந்த புக்கை கொண்டு வந்து தன் அறையில் மறைத்து வைத்துக்கொண்டார் சுசித்ரா.
அர்ஜூனும் ரிஷியும் நேராக கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்ல அங்கு வெண்ணிலா இருந்தாள். கொஞ்சம் கவலையோடு இருந்தாள்
”இவள் ஏன்டா இங்க இருக்க”