”என்னடா”
“எதுக்கு இப்படி பார்க்கறீங்க”
“ஏன் பார்த்தா என்ன”
“என்னவா போதும்ணா போதும் பொண்ணுங்களை நீங்க இந்த லட்சணத்திலதான் பார்த்து வைப்பீங்களா அதான் எல்லா பொண்ணுங்களும் நீங்கதான் வேணும்னு ஆசைப்படுதா”
“ரொம்ப முக்கியம் சரி வா நான் பேசி பார்க்கறேன்” என சொல்லி ரிஷியும் வெண்ணிலாவிடம் சென்று சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பின் வெண்ணிலா மனம் தெளிந்து தைரியமாக தன் வீட்டுக்கு சென்றாள். அவள் சென்றதும் அர்ஜூனை அவசரமாக அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் ரிஷி.
மணி 9.15 என காட்ட அதற்குள் டின்னர் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அர்ஜூனும் ரிஷியும் கூட சாப்பிட ஆரம்பித்தனர்.
டின்னரும் ஓரளவு முடியவே தாத்தா மெதுவாக அந்த 4 பெண்களிடம் பேசினார்
”நாளைக்கு சன்டே அதனால காலையில எல்லாரும் பொறுமையாதான் எழுவாங்க. அதனால நீங்க காலையில ஒரு 10மணிக்குள்ள ரெடியாக டிபன் செஞ்சி வைச்சிடனும் சரியா”
“சரிங்கதாத்தா” என சொல்லிவிட்டு அனைவரும் கலைந்து செல்ல வந்தனா வேண்டுமென்றே கிச்சனுக்குள் சென்று நந்தினிக்கு முன்னாடியே பால் காய்ச்சி அனைவருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். ரிஷியிடம் வந்து பால் நீட்ட
”எனக்கு பால் சாப்பிட பிடிக்காது”
“நந்தினி கொடுத்தா மட்டும் சாப்பிட்டீங்களே” என குதர்க்கமாக கேட்க