(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”உனக்கு நான் சொல்லமாட்டேன்”

   

“நான் யாருக்கும் சொல்லமாட்டேன் தாத்தா”

   

“உன்னை நம்ப மாட்டேன் நீ போய் தூங்கு காலையில பாரு என்ன வேடிக்கை நடக்குதுன்னு” என சொல்லவும் 

   

”இல்லை இப்பவே சொல்லுங்க” என கத்த சித்தி ரிஷியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

   

”சித்தி நீங்களாவது சொல்லுங்க நாளைக்கு என்ன ஏற்பாடுகள் செஞ்சி வைச்சிருக்கீங்க”

   

“நாளைக்கு பாருடா உனக்கே புரியும் இப்ப போய் தூங்கு” என சொல்லிவிட்டு அவர் தன் அறைக்கு சென்றுவிட ரிஷிக்கு பயமே வந்தது.

   

”நந்தினி பாவம் அவளுக்கு இருந்த 3 வாய்ப்புல ஒரு வாய்ப்பை விட்டுட்டா. இதுல நாளைக்கு என்ன மாதிரியான கஷ்டங்களை தரப்போறாங்களோ தெரியலையே ஆண்டவா அவளை நீதான் காப்பத்தனும்” என மனதுக்குள்ளே கடவுளுக்கு வேண்டுதல் செய்துக்கொண்டே தன் அறைக்கு சென்றவன் அங்கு அர்ஜூன் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருப்பதைப்பார்த்து கோபம் வந்தது

   

”பாவி நாளைக்கு தாத்தா பெரிசா எதையோ செய்யப்போறாரு இன்னிக்கே உன் தங்கச்சி தோத்துட்டா நாளைக்கு என்னாவாளோ அது கூட தெரியாம எப்படி தூங்கறான் பாரு. ஆமா இவனுக்கென்ன நான் இல்லைன்னாலும் அவன் தங்கச்சிக்கு வரிசையா மாப்பிள்ளைகளை பார்த்து வைச்சிருக்கான். 

   

நான்தான் எப்படியாவது நந்தினிக்காக கஷ்டப்படனும் போல இருக்கே சே இவன் வந்ததால இன்னிக்கு என்னால அவளுக்கு பூஸ்ட் கொடுக்க கூட முடியலை. பாவம் இன்னிக்கு அவள் சமையல் செய்ய முடியலைன்னு வருத்தமாயிருப்பா அவளை சமாதானம் செய்ய கூட 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.