”ஆமாம் நந்தினி கொடுத்தது நட்ஸ்பால் இது சாதாரண பால் அதனால எனக்கு வேணாம்” என சொல்லும் போதே நந்தினி அவனுக்காக நட்ஸ்பால் தயார் செய்து கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கியவன் வந்தனாவிடம் காட்டிவிட்டு குடிக்க ஆரம்பித்தான். அவனின் செயலில் வந்தனாவிற்கு அதிகமாகவே கோபத்தை வரவழைக்க அவள் பேசாமல் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.
அவள் சென்றதும் நந்தினி ரிஷியைப் பார்த்தாள்
”வந்தனா கோச்சிட்டு போறத பார்த்தா எனக்கு கொஞ்சம் கஷ்டத்தை வரவழைப்பாளோன்னு தோணுது அத்தான்“ என்றாள்
”நீ கவலைப்படாத அவளை நான் திரும்பி கூட பார்க்க மாட்டேன் நீ தைரியமா போய் தூங்கு அவளை நினைச்சி வருத்தப்படாத போ” என சொல்லிவிட்டு ரிஷி தாத்தாவை தேடி சென்றான். அவரோ இன்றைய பொழுதுக்கான மார்க்குகளை சுசித்ராவுடன் சேர்ந்து போட்டுக்கொண்டிருந்தார். அருகில் சென்ற ரிஷி அந்த அட்டவணையை பார்த்தான். அதில்
பெயர்கள் சோனா வந்தனா மிருதுளா நந்தினி
சமையல் 80 60 40 10
ஒழுக்கம் 60 10 30 80
சுபாவம் 50 40 30 50
பணிவு 50 30 30 60
புத்திசாலித்தனம் 90 50 50 10
அனுசரித்தல் 90 40 20 20
சகிப்புதன்மை 70 40 10 50
மொத்தம் 700க்கு 490 270 210 280
அட்டவனையை கண்ட ரிஷிக்கு கோபம் வந்து தாத்தாவிடம்
”தாத்தா என்ன இது இன்னிக்கு சோனாவுக்கு அதிகமா மார்க் போட்டிருக்கீங்க நந்தினிக்கு