(Reading time: 31 - 61 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“என்னடா சொல்ற தாத்தாவா”

   

“ஆமாம்”

   

“எதுக்கு”

   

“ம் என் தங்கச்சிக்கு அவரால பாதுகாப்பு தரமுடியலையாம் உங்க தொல்லையை தாங்க முடியலைன்னு வரவழைச்சாரு”

   

“நான் எதையும் பண்ணலைடா வேணா உன் தங்கச்சியை கேளு”

   

“அவளை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என் தங்கச்சி பத்தரைமாத்து தங்கம் நீங்கதான் அவள்கிட்ட எதையாவது சேட்டை செஞ்சிருப்பீங்க”

   

“நானா சத்தியமா இல்லைடா அவள் போட்டியில கலந்துக்கிட்டு ஜெயிக்கனும்னு நிறைய பூஸ்ட் எல்லாம் கொடுத்திருக்கேன் தெரியுமா” என சொல்லிவிட்டு நந்தினியை பார்த்து

   

”சொல்லு நந்தினி நான் உனக்கு பூஸ்ட் கொடுத்து உன்னை உற்சாகப்படுத்தினேன்ல”

   

என சொல்ல நந்தினிக்கு வெட்கம் வந்து தலை குனியவும் அர்ஜூன் அவளிடம்

   

”நந்தினி நீ போய் ரெடியாகு போ” என சொல்ல அவளும் அங்கிருந்து சென்றுவிட்டாள். அவள் சென்றதும் அர்ஜூன் ரிஷியிடம்

   

”இதப்பாருங்கண்ணா வேணாம் ஏதோ என் தங்கச்சிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்கட்டுமேன்னு தான் நான் பொறுமையா இருக்கேன். சும்மா அவளை வேலை செய்ய விடாம தொல்லை கொடுத்தீங்கன்னா நான் சும்மாவேயிருக்க மாட்டேன்”

   

“நான் எதுவும் பண்ணலைடா”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.