தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 49 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தியாகு அப்படி தூக்குவான் என எதிர்பார்த்திராத கிருத்திகா திகைத்துப் போய் விழித்தாள்.
“விடுங்க என்னை கீழே விடுங்க...”
கத்தியப்படி கைகளில் துள்ளியவளை பார்த்து சின்ன புன்னகை ஒன்றை தந்தபடி நடந்தான் அவன்.
“விடுங்க... வீட்டுல எல்லோரும் இருக்காங்க...”
“யார் இருந்தா எனக்கென்ன வந்தது? என் கீர்த்தியை நான் தூக்கிட்டுப் போறேன்...”
“இப்போ விட போறீங்களா, இல்ல நான் கத்தவா?”
“கத்து நல்லா கத்து... இந்த அரும் பெரும் காட்சியை பார்க்காம தள்ளி இருக்குறவங்களும் வந்து பார்க்கட்டும்...”
அவளை கைகளில் ஏந்தியப்படி நடந்தவன் வீட்டின் உள்ளே சென்று தான் அவளை இறக்கி விட்டான்.
செவ்வந்தி உட்பட மற்றவர்களின் திகைத்த + கேலி பார்வையை கண்டுக்கொள்ளாமல், மனைவிக்கு மட்டும் கேட்கும் வண்ணம், கைகளை நீட்டி மடித்து
“ஹப்பா...!” என்றான் தியாகு.
கிருத்திகா என்ன என்பது போல விழிக்க,
“கை எல்லாம் வலிக்குது...” என விளக்கம் கொடுத்தான் தியாகு!
“நானா உங்களை தூக்கிட்டு நடக்க சொன்னேன்... இல்லைனாலும் ஒரு அம்பத்தி அஞ்சு கிலோ உங்களால தூக்க முடியாதா???”