(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

கிருத்திகா மனதில் அவன் இருக்கிறன என்பதில் அவனுக்கு இப்போது சிறிதும் சந்தேகமில்லை! ஆனால் அதை எப்படி அவளின் வாயினால் சொல்ல வைப்பது என்று தான் அவனுக்கு புரியவில்லை...

   

பார்ட்டியில் அவளை கையில் தூக்கி கொண்டு நடந்ததைப் போல ஷாக் ட்ரீட்மென்ட் ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற யோசனையுடன் ஆஃபிசில் இருந்து வீடு திரும்பியவன் கிருத்திகாவும், செவ்வந்தியும் சண்டைக் கோழிகளாக சிலிர்த்து நிற்பதை பார்த்து திகைத்துப் போனான்.

   

கிருத்திகா அன்று வரை அவனுக்கு தெரிந்து செவ்வந்தியிடம் கோபமாக எதுவும் பேசியதில்லை... செல்லமும் கொஞ்சியதில்லை... எதுவாக இருந்தாலும் அவனிடம் தான் கோபத்தை காட்டுவாள்...

   

என்ன பிரச்சனையாக இருக்கும் என்று அவன் யோசிக்கும் முன்பே,

   

“இங்கே பார் தியாகு, அவக் கிட்ட பேசி நாளைக்கு காலையில பத்து மணிக்கு ரெடியா இருக்க சொல்லு. உங்களுக்கு கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆச்சு... குழந்தை பத்தி ஒரு நியூசும் இல்லை. இதுக்கு மேல என்னால சும்மா இருக்க முடியாது. டாக்டர் கிட்ட போகனும்,” என்றாள் செவ்வந்தி.

   

“அம்மா...” என்று பேச தொடங்கியவனை, பேச விடாமல் தடுத்து,

   

“இதுக்கு மேல பேசி என் மனசை மாத்த முடியாதுப்பா... நீயும் வேணா வா... நாளைக்கு பத்து மணிக்கு ரெடியா இருங்க இரண்டு பேரும்...” என்று சொல்லி விட்டு கிளம்பிச் சென்றாள் செவ்வந்தி.

   

மனைவி பக்கம் பார்த்து,

   

“கீர்த்தி... அம்மாக்கு நமக்குள்ளே இருக்கும் பிரச்சனை தெரியாது” என்று அவன் தொடங்க,

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.