“நான் என்ன டெய்லி வெயிட் லிஃப்டிங்கா செய்றேன்... சொல்லு... வேணா ஒரு டீல் வச்சுப்போம், தினமும் உன்னை இப்படி தூக்கி ப்ராக்டிஸ் செய்றேன், அப்போ கை வலிக்காது...”
“உங்க கிட்ட பேச வந்தேன் பாருங்க...”
கோபமாக கிருத்திகா சொல்ல முயன்றது கோபமே இல்லாத சிணுங்கலாக தான் வெளி வந்தது! ஏற்கனவே தனி மயக்கத்தில் இருந்தவன், இப்போது இன்னமும் மயங்கிப் போனான்! மற்றவர்களின் கேலி, கலாட்டா எதுவுமே அவனை சிறிதும் பாதிக்கவில்லை!
அவனை விட்டு தள்ளி இருக்க மற்ற பெண்களின் அருகில் இருந்தவளிடமே அவனின் பார்வை தொடர்ந்துக் கொண்டிருந்தது!
❀✿❀✿❀✿
அன்றிரவு வீடு திரும்பும் போது, கிருத்திகா அவன் எதிர்பார்த்ததுப் போல இனிய மனநிலையுடன் வரவில்லை! மாறாக தனக்குள்ளேயே மெதுவாக எதையோ சொல்லி புலம்பிக் கொண்டே வந்தாள்.
“என்ன விஷயம் கீர்த்தி... எதுவா இருந்தாலும் என் கிட்ட நேரா சொல்லு,” என்றான் தியாகு!
“உங்க அம்மாக்கு உங்க மேல பாசம் அதிகம்... அதை உங்க கிட்ட மட்டும் காட்ட வேண்டியது தானே... என் மேலே விழாத குறையா செல்லம் கொஞ்சனுமா??? கூடவே எப்போ குழந்தை பெத்துக்க போற போறன்னு கேள்வி வேற... குழந்தை என்ன வானத்துல இருந்தா குதிச்சு வரும்???”
தியாகு திரும்பி கிருத்திகாவை ஒரு பார்வை பார்த்தான்...
அவன் பார்வையை கவனித்தவள், உதட்டை கடித்துக் கொண்டு ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்...