தியாகுவிற்கு அவளை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மீண்டும் வந்தது...
ஆனால் தன்னை அடக்கிக் கொண்டு சாலை பக்கம் கவனத்தை திருப்பினான்...
பின்னே கெத்தாக நீயாக சொல்லும் வரை காத்திருக்கிறேன் என்று அவளிடம் சொல்லி விட்டு வேறு என்ன செய்வது???? ஹும்...!
❀✿❀✿❀✿
இவர்கள் இருவரின் ஆர்ப்பாட்டமான ஊடல்களும், ரகசிய சீண்டல்களுமாக நாட்கள் தொடர்ந்து சென்றன...
கிருத்திகாவின் மனதினுள் அவன் மீது அன்பு இருப்பதாக தியாகு முழுமையாக நம்பினான்...
ஆனால் நாட்கள் சென்றதே தவிர அவள் இறங்கி வருவதாகவும் தெரியவில்லை, மனதில் இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாகவும் தெரியவில்லை!
தியாகு ரொம்பவே கஷ்டப்பட்டு தான் தன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டிருந்தான்.
அன்று அவனுக்கு நல்ல ஜுரம்... மாலையில் வீட்டிற்கு வந்ததும், படுக்கையில் விழாத குறையாக படுத்தது தான் தெரியும், அதற்கு மேல் எதுவுமே நினைவில் இல்லை!
நடுராத்திரி அவனுக்கு விழிப்பு வந்த போது, அவனின் நெற்றியை ஒரு பட்டு விரல் மென்மையாக வருடிக் கொண்டிருந்தது...
கண்களை முழுதாக திறக்காமல் கொஞ்சமாக விரித்து பார்த்தவனுக்கு அது கீர்த்தி தான் என்பது உறுதியாக தெரிந்து விடவும், ஜுரத்தினால் இருந்த சோர்வு எல்லாம் அவனுக்கு மாயமாக பறந்து போனது.