தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 50 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தியாகராஜன் நிதானத்துடனே பேசினான்!
“இல்ல கீர்த்தி, அம்மா சொன்னதை பெருசா எடுத்துக்காதே... பொதுவா அவங்க ஜெனெரேஷன் அப்படி தான் யோசிப்பாங்க...”
“இதுக்கு மேல என்னை அசிங்கப் படுத்த முடியாது நீ... முதல் நாளே நான் சொன்னேன், எப்போ வேணா நாம பிரிஞ்சிடுவோம்னு... அந்த நோட்டிஸ்ல கையெழுத்து போட்டு கொடுங்க... நான் போறேன்...” என்று சீறினாள் அவன் மனைவி.
“என்ன பேசுற நீ? சின்ன விஷயத்தை பெரிசாக்குற...”
“இது உங்களுக்கு சின்ன விஷயமா? இதுக்கு மேல உங்க கிட்ட பேச என்ன இருக்கு? எனக்கு உங்க கூட வாழ பிடிக்கலை... நீங்க ஒரு கோழை...”
“இங்கே பார் கீர்த்தி, அம்மா ஏதோ தெரியாமல் பேசி இருப்பாங்க... நான் அவங்க கிட்ட...”
“பேசுறதை நிறுத்துங்க... இதுக்கு மேல நாம பேச ஒண்ணுமில்லை... எனக்கு இந்த நரக வாழ்க்கை பிடிக்கவே இல்ல... எனக்கு அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி இந்த கல்யாணத்தில கொஞ்சம் கூட இஷ்டமில்லை, போதுமா...”
அவளின் வார்த்தைகளினால் காயப்பட்டு, தியாகு முதல் முறையாக பொறுமையை இழந்துப் பேசினான்...
“அப்போ ஏன் என்னை கல்யாணம் செய்துக்கிட்ட? நான் என்ன உன்னை கடத்திட்டு வந்தா கல்யாணம் செய்துக்கிட்டேன்?”
அவன் பக்கம் அனல் வீசும் பார்வை ஒன்றை பார்த்த கிருத்திகா,
“இல்லை, ஆனால் எனக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சு தானே நீ கல்யாணம் செய்துக்கிட்ட...” என்றாள் பற்களை கடித்துக் கொண்டே!