“நீ சும்மா பேருக்கு தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னா, அந்த கார்த்திக்கையே கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்ல வேண்டியது தானே? வேலை வேலைன்னு பேயா அலையுறீயே அந்த ஆஃபீஸ் மொத்தமா உனக்கே சொந்தமாகி இருக்கும்... நானும் உன்னோட இம்சை இல்லாமல் நிம்மதியா இருந்திருப்பேன்...”
“இப்போவும் ஒன்னும் குறைஞ்சுப் போகலை... என்னால உங்க நிம்மதி போக வேண்டாம்... நான் போறேன்... அந்த பேப்பர்ல கையெழுத்து போட்டு அனுப்புங்க... அதுக்கு அப்புறம் எந்த கவலையுமில்லாமல் சந்தோஷமா இருங்க...”
கிருத்திகா கோபத்துடன் செல்வதை பார்த்தபடி நின்றான் தியாகராஜன்...
ஏன் அவளை அந்த அப்போது தடுத்து நிறுத்தவில்லை என்று பலமுறை யோசித்திருக்கிறான்... ஆனால் அவனிடம் பதில் இல்லை...
சில மணித்துளிகள் செல்ல, அவனின் கோபம் மெல்ல கரைந்தது... கிருதிகாவுடைய செல் ஃபோன் நம்பருக்கு அழைத்தான், ஸ்விட்ச்ட் ஆஃப் என்றது...
சிறிது நேரம் கழித்தும் அதே மெசேஜ் வர, விஜயை அழைத்தான்...
அதன் பின் வந்த நிமிடங்களை... நாட்களை பற்றி யோசிக்கவே அவனுக்கு இப்போதும் பிடிக்கவில்லை...
கிருத்திகா எங்கே போனாள் என்று தெரியாமல்... என்ன ஆனாள் என்றும் புரியாமல்...
மிகவும் கொடுமையான நாட்கள்...!
ஒருவேளை அவளுக்கு அவன் மீது அன்பிருப்பதாக அவன் நினைத்தது தவறோ??? அவனை பிடிக்காமல் தான் சென்று விட்டாளோ??? விவாகரத்திற்கு சம்மதம் என்று சொன்னால் வந்து விடுவாளோ??? ஆனால் அதை எப்படி அவளிடம் சொல்வது???