டெல்லியில் வேலை விஷயமாக அலைந்துக் கொண்டிருந்த தியாகுவின் மனதில் கிருத்திகாவின் நினைவுகளும் நிழலாக தொடர்ந்துக் கொண்டே இருந்தன...!
வந்த உடன் அவளுக்கு ஃபோன் செய்து பேசியதோடு சரி... அதன் பின் அவளுடன் பேச அவனுக்கு மனம் வரவில்லை...
தினமும் அவளுடன் பேச, மெசெஜாவது அனுப்ப அவன் மனம் பரபரக்க தான் செய்தது... ஆனாலும் அவன் செய்யவில்லை...
அவளும் தினம் தினம் ட்ரீட்மென்ட்டிற்கு சென்றதாலோ என்னவோ அவனுடன் பேசவில்லை...
அவளை பற்றி நினைக்கவே அவனுக்கு சுகமாக இருந்தது... கூடவே மனைவியை மனைவியாக நினைக்க முடியவில்லையே என்று ஏக்கமாகவும் இருந்தது...
பல நூறு ஆண்டுகளாக தோன்றிய நாட்கள் மெல்ல செல்ல, ஒரு நாள் விஜயிடம் இருந்து அவனுக்கு ஃபோனில் அழைப்பு வந்தது.
“மச்சான் ஒரு சந்தோஷமான விஷயம்டா...”
விஜய்யின் குரலில் இருந்த உற்சாகம் தியாகுவினுள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது...
“என்ன விஷயம்டா?”
“பிரின்சஸ்க்கு உன்னை பத்தின ஞாபகம் வந்திருச்சு...”
தியாகுவினுள் மகிழ்ச்சி மின்னல்கள் ஏற்பட்டது... ஆனால் அந்த மகிழ்ச்சியின் ஊடே தானாக மெல்லிய கோடாக ஒரு சின்ன கேள்வியும் எழுந்தது... அவளுக்கு அந்த கீர்த்தியின் நினைவும் இருக்கிறதா??? ஆனால் ‘அந்த’ கேள்வியை ஒதுக்கி விட்டு,
“வாட்...???!!! ரியலி????? ரொம்ப சந்தோஷம்டா... ஆனால் அது என்ன என்னை பத்தின்னு