(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

மட்டும் சொல்ற?” என்றுக் கேட்டான்.

   

“டாக்டர் எக்ஸ்ப்ளேயின் செய்தாருடா... இவளுக்கு இருப்பது அந்த ஆக்சிடன்டால் வந்த retrograde amnesiaவாம்... பொதுவா நமக்கு நினைவில் இருப்பது எல்லாம் நம்ம மூளையில ஒரு மாதிரியான பேட்டர்ன்ல (pattern) ஸ்டோர் ஆகி இருக்க விஷயங்கள்... அம்மா, அப்பா இப்படி நிறைய... தேவை படும் போது நமக்கு வேண்டிய பேட்டர்னை நம் மூளை உருவாக்கி கொடுக்குமாம்... இந்த மாதிரி அம்னிசியா இருக்கவங்களுக்கு ஒன்னு அந்த பழைய சம்பவங்கள் இருக்க பேட்டர்ன் எல்லாம் அழிஞ்சு போயிருக்கும்... இல்லை அதை தேவைப்படும் போது மூளையால உருவாக்க முடியாமல் இருக்குமாம்... இப்போ இந்த டாக்டர் செய்ற தெரபி பழைய விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு கொண்டு வரும் முயற்சி... அதாவது அந்த பேட்டர்ன்ஸ் இன்னும் இருந்தால் அதை திரும்ப உருவாக்கும் திறமையை ஏற்படுத்தும் முயற்சி... எந்த விஷயத்துல இருந்து ஆரம்பிக்கலாம்னு டாக்டர் கேட்டப்போ, முதல் நாளே பிரின்சஸ் உன்னை பத்தி தான் ஞாபகம் வரனும்னு சொல்லி இருக்கா...”

   

“ஓ... அப்போ...”

   

“அவளுக்கு உங்க கல்யாணம் அப்புறம் சில சம்பவங்கள் ஏன் சண்டை போட்டுட்டு வீட்டுல இருந்து கிளம்பினது கூட இப்போ ஞாபகம் வந்திருச்சு மச்சான்... என்னை பத்தி, சித்தப்பா, சித்தி பத்தி கூட கொஞ்சம் கொஞ்சம் தெரியுது... ரொம்ப நல்ல இம்ப்ரூவ்மென்ட்ன்னு டாக்டர் சந்தோஷப்பட்டார்... இதையே படி படியா செய்தா அவளுக்கு பழசு எல்லாம் நினைவுக்கு வர வாய்ப்பு அதிகமாம்... நீ சீக்கிரம் வா... நீ பக்கத்துல இருந்தா அவளுக்கு இன்னும் சீக்கிரம் ப்ரோக்ரஸ் இருக்கும்னு டாக்டர் சொல்லி இருக்கார்...”

   

“சீக்கிரம் வர பார்க்கிறேன் விஜய்... ஆமாம், பழசு ஞாபகம் வந்தாலும் இந்த ஆறு ஏழு மாசமா இருக்க விஷயங்களும் ஞாபகம் இருக்கும்ல?”

   

அதற்கு மேல் கேட்காமல் இருக்க முடியாமல், கொஞ்சம் தயக்கத்துடன் தான் தியாகு இந்த கேள்வியை கேட்டான்...

   

ஆம் என்று சொல்லிவிடு... ப்ளீஸ்... என்று மனதினுள் வேண்டிக் கொண்டே கேட்டான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.