அவனுள் பல பல கேள்விகள், குழப்பங்கள்...
விஜய் கிருத்திகாவை கண்டுப்பிடித்து விட்டதாக சொன்ன போது அவள் விரும்பியது போலவே அவளுக்கு பிடிக்காத வாழ்வில் இருந்து விடுதலை தருவது தான் சரி என்று முடிவு செய்து அவள் கொடுத்த விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்டு எடுத்துக் கொண்டு தான் கிளம்பினான்...
ஆனால் அங்கே அவன் சந்தித்தது...
தியாகராஜன் முகத்தில் மீண்டும் புன்னகை வந்தது...
“...இங்கே பாருங்க, என்னை பத்தி உங்களுக்கு சரியா தெரியலை... அப்படி ஈசியா எல்லாம் உங்களுக்கு நான் சைன் போட்டு கொடுத்துற மாட்டேன்... நீங்க இப்படி அடம் பிடிச்சா என் கூடவே இருந்து கஷ்டப் பட வேண்டியது தான்...”
டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு தர மாட்டேன் என்று வேரூரில் இருந்து வரும் போது கிருத்திகா மிரட்டியது இப்போதும் அவனுக்கு நினைவில் இருந்தது...
எத்தனை இனிமையானவள் அவள்... அவன் அவனின் கீர்த்தியை பற்றி கற்பனை செய்தது எல்லாமே நிஜத்தில் வந்தது போல வந்திருப்பவள்... ஆனால் இப்பொழுதும் அவன் அவளை விட்டு விலகி தானே இருக்க வேண்டி இருக்கிறது...!
ஹும்...!
பெருமூச்சுடன் நினைவுகளில் இருந்து மீண்டு வந்தவன் இலக்கே இல்லாது விமானத்தின் ஜன்னல் வழியாக தெரிந்த மேகத்தை வெறித்துப் பார்த்தான்!
❀✿❀✿❀✿