(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

திறந்து மொபைலை வைக்க முயன்றுக் கொண்டிருந்தாள். அவளை வழக்கம் போல் ரகசியமாகப் பார்த்து மனதினுள் ரசித்தவன், அவளுக்கு காலை வணக்கம் சொல்ல நினைக்கும் போதே, கீழே இருந்து கீதா அவளை அழைப்பது கேட்டது. அவசரமாக ஃபோனை கைப்பை அருகே வைத்து விட்டு, கீழே சென்றாள் இந்து.

   

ஒரு பெருமூச்சை வெளியேற்றிய சஞ்சீவ், வேகமாக சென்று, இந்து வைத்திருந்த ஃபோனை எடுத்து அருகில் இருந்த சின்ன மேஜையினுள் வைத்து மூடினான்!

   

 🌼🌸❀✿🌷

   

ரஞ்சனி சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தாள்! அப்போது தான் காஞ்சனாவின் குடும்பத்தினார் அனைவரும் ஒன்றாக காலை சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். ரஞ்சனியை காத்திருக்க வைக்க விரும்பாமல், அவசரமாக தன் உணவை முடித்து விட்டு கிளம்பினாள் இந்து. மாடிக்கு சென்று முன்பே வைத்திருந்த கைப்பையை எடுத்தவள் மொபைலை பற்றி ஒரு வினாடி சிந்தித்தாள். பின், அது பேகின் உள்ளே தான் இருக்கும் என முடிவு செய்து குடும்பத்தினர் அனைவரிடமும் சொல்லி விடை பெற்று ரஞ்சனியுடன் கிளம்பினாள்.

   

அவளின் அவசரத்தையும், பரபரப்பையும் கிண்டல் செய்தப்படி உணவை முடித்தான் ராஜீவ். 

   

மற்றவர்களும் கிட்டத்தட்ட சாப்பிட்டு முடித்திருந்த நேரத்தில், "இன்னைக்கு ஈவ்னிங் நம்ம ஆஃபிசில் ஒரு சின்ன பங்க்ஷன்..." என்றான் சஞ்சீவ்!

   

தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்  சஞ்சீவ் பொதுப்படையாக சொல்லவும், மற்றவர்கள் அவனை கேள்வியுடன் பார்த்தார்கள்.

   

"நம்ம நெட்வொர்க்கில் அஞ்சு ஹாஸ்ப்பிட்டல்ஸ் சேர்த்தாச்சு, அதுக்காக தான் ஒரு சின்ன பார்ட்டி... அஞ்சு ஹாஸ்ப்பிட்டல்ஸ்ல இருந்தும் கொஞ்சம் பெரிய ஆளுங்க வராங்க, நம்ம வீட்டில இருந்து நீங்க எல்லோரும் வரணும்... அர்ச்சனா ஆன்ட்டிக்கு ஃபோன் செய்து இன்வைட் ச

{/f90filter}ெய்றேன்... திடீர்னு தான் ப்ளான் செய்தேன்..." என விளக்கமாக சொன்னான் சஞ்சீவ்!

   

"அதுக்குள்ளே அஞ்சா? சூப்பர்! கலக்குறீங்க சஞ்சீவ்... கங்கிராட்ஸ்!!" என வாழ்த்தினாள் கீதா.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.