தொடர்ந்து மற்றவர்களும் வாழ்த்தினார்கள்.
"சரியா மூணு மணிக்கு ஃபங்க்ஷன்... நீங்க டிரைவர் கூட வந்திருவீங்க தானே அம்மா, அண்ணி, கண்மணி?"
"ஆமாம், நாங்க டைமுக்கு வந்திடுறோம்... ஆனால் இந்து? அவ எப்படி வருவா?" என்றாள் காஞ்சனா.
"அவ சீக்கிரம் ஷாப்பிங் முடிந்து வந்தா, உங்க கூட வரட்டும், லேட்டானால், ரஞ்சனி கூட நேரா அங்கேயே வந்திருவா..."
கணவனும் மனைவியும் ஏற்கனவே பேசி திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்ட காஞ்சனா, "அதுவும் சரி தான்..." என்றாள்!
தன்னுடைய நாடகம் அதுவரையில் நல்ல முறையில் அரங்கேறிய திருப்தியுடன் அலுவலகம் கிளம்பினான் சஞ்சீவ்!
🌼🌸❀✿🌷
மாலையில் சஞ்சீவ் சொன்ன ஃபங்க்ஷன் ஆரம்பிக்கும் முன்பே காஞ்சனா, கீதா மற்றும் கண்மணியுடன், சஞ்சீவ் சொல்லி இருந்த ஹோட்டலை வந்து அடைந்தாள். அங்கே அன்று வர இருந்த விருந்தினர்கள் சிலரை அவளுக்கு முன்பே பரிச்சயம் இருந்தது. அவர்களின் மருத்துவமனையின் தலைமை பொறுப்பை சஞ்சீவ் அவளிடம் கொடுத்திருந்ததால், சில சமயம் இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அதை எல்லாவற்றையும் விட, பெண்களுக்கே உரிய பண்புடன், தன் இரண்டு மருமகள்களையும் விருந்தினருக்கு ஆறுமுகப் படுத்த விரும்பினாள். எத்தனை வீடுகளில் இது போல் இரண்டு மருமகள்களும் மாமி
{/f90filter}
யாருடன் நட்புடன் வாழ்கிறார்கள்? மனதில் பொங்கிய பெருமையுடன் காத்திருந்தாள் காஞ்சனா!
சொன்ன நேரத்திற்கு அந்த விழா துவங்கியது. விருந்தினர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்.