தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 51 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“நீ திரும்பி வரும் போது பிரின்சசை பழைய மாதிரி பார்க்கப் போற... நாளைக்கே கிளம்பி வரீயா?”
விஜயின் ஆர்வம் நிறைந்த கேள்வி தியாகராஜனை இயல்புக்கு திருப்பியது!
“நாளைக்கு வர முடியுமான்னு தெரியலைடா... முடிஞ்ச அளவு சீக்கிரம் வரேன்,” என்றான்!
“தேவையில்லாமல் நீ டிலே செய்ய மாட்டேன்னு தெரியும்... ஸோ, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வாடா...”
“ஓகே டா... கீர்த்தியை நல்லா கவனிச்சுக்கோன்னு உன் கிட்ட சொல்ல வேண்டாம்... இருந்தாலும்...”
“என்ன மச்சான், நீ என் கிட்ட இதெல்லாம் சொல்லனுமா? அவ என் பிரின்சஸ்டா...”
“தெரியும்... பார்த்துக்கோ... நான் சீக்கிரம் வந்திடுறேன்...”
ஃபோனை கட் செய்து வைத்த தியாகுவினுள் சந்தோஷமும், வருத்தமும் ஒன்றாக சேர்ந்து எழுந்தன...
இதோ வருகிறது... அதோ வருகிறது என்ற புலி வந்தே விட்டது...!
கிருத்திகா பழைய நிலைக்கு திரும்புவது தான் சரி... அது தான் அவளுக்கு நல்லது என எத்தனை சொல்லி மனதை தேற்ற முயன்றாலும் மனதில் ஏற்பட்ட வலியை தியாகுவால் தடுக்க முடியவில்லை...
சென்னையில் வீட்டில் இருந்து கிளம்பி வரும் போது மனமில்லாமல் காரில் இருந்து இறங்கி அவனுக்காக கை அசைத்தவளை இனிமேல் பார்க்க முடியாது...
அவன் விரும்பியதுப் போல அவன் மேல் அன்பும், காதலும் காட்டிய கீர்த்தி இனி இல்லை!