(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

“கீர்த்தி... உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்... நா...”

   

அவன் பேசி முடிக்கும் வரை காத்திருக்காமல்,

   

“ஓ, அதனால தான் எனக்கு ஓல்ட் மெமரிஸ் வருதுன்னு தெரிஞ்ச உடனே அலறி அடிச்சுட்டு டெல்லில இருந்து உடனடியா ஓடி வந்தீங்களா?” என்றாள் அவள்.

   

அவள் கேள்வியில் கிண்டலோ, கோபமோ இருப்பதாக தெரியவில்லை! எனவே அந்தக் கேள்வியை எப்படி எடுத்துக் கொள்வது என்ற யோசனையுடன், “நான் பக்கத்துல இருந்தா உனக்கு பிடிக்காது... நான் இல்லைனா சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சேன்,” என்றான் தியாகு!

   

“என்ன ஹீரோ சார், பொய் எல்லாம் சொல்றீங்க... உங்க மனசை இப்போ முழுசா கவர்ந்து விட்டவளை திரும்ப பார்க்க முடியாதேன்னு ஃபீல் செய்த மனசை தேத்திக் கிட்டு வர, இத்தனை நாளாச்சா?”

   

“கீர்த்தி, என்ன சொல்ற நீ???”

   

“உங்களைப் பத்தி தான் சொல்றேன் மிஸ்டர் ரொமான்டிக் ஹீரோ...”

   

“நான்...” என்ன சொல்வதென்று புரியாது தடுமாறினான் தியாகு!

   

“சும்மா இழுக்காதீங்க... எனக்கு எல்லாம் தெரியும்!”

   

தியாகு புரியாமல் விழித்தான்... இவளுக்கு எல்லாமே நினைவிருக்கிறதா? இல்லை ஒருவேளை...

   

“என்ன? சும்மா அம்னீசியான்னு நடிச்சேனான்னு யோசிக்குறீங்களா? அப்படி அமைதியா பொறுமையா ஃபிலிம் காட்ட எல்லாம் எனக்கு தெரியாது சார்... ஆனால் உங்க அந்த சின்ன 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.