‘ஒரிஜினல்’ கீர்த்தி தான் காதல் இருந்தாலும் அதை வெளியே சொல்ல மாட்டாளே!
ஆனால் என்ன ஆனாலும், இன்னுமொரு முறை பிடிக்காத வாழ்வை வாழ சொல்லி கீர்த்தியை வற்புறுத்த கூடாது... அன்று மனம் எவ்வளவு புண் பட்டிருந்தால் அப்படி காரில் கிளம்பி சென்றிருப்பாள்???
அவள் விரும்பிய பிரிவை அவளுக்கு கொடுப்பது தான் சரி...!
ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் இதையும் எதிர்கொண்டே தான் ஆக வேண்டும் என்று மனதை திடப் படுத்த முயன்றான்...!
🌼🌸❀✿🌷
இரண்டு நாட்களுக்கு பிறகு சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வெளி வந்த தியாகுவை விஜய் எதிர்கொண்டு அணைத்துக் கொண்டான்.
“மச்சான், வா வா நேரா வீட்டுக்குப் போய் பிரின்சஸ் பார்ப்போம்... உன்னை பேக் செய்தா தான் அவ மெமரி இம்ப்ரூவ் ஆகும்னு தெரிஞ்சிருந்தா எப்போவோ இதை செய்திருக்கலாம்...”
விஜய் துள்ளி குதிக்காதது ஒன்று தான் குறை... மற்றபடி வானத்தில் பறப்பவனை போல உற்சாகத்தில் இருந்தான்...
“என் காரை இங்கே பார்க் செய்துட்டு தான்டா போனேன்... நானே வந்திருப்பேனே,” என்றான் தியாகு!
“உன்னை பத்திரமா பிரின்சஸ் கிட்ட சேர்க்கனுமே நான், அதுக்கு தான் வந்தேன்! இப்போவும் ஒன்னும் கெட்டு போகலை, நீ உன் கார்ல என்னை ஃபாலோ செய்துட்டு வா...”
“ஓகே டா...”