தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 51 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தியாகராஜன் கிருத்திகா காட்டிய டைரியை வாங்கி திறந்துப் பார்த்தான்...
“இதுல ஆக்சிடன்ட் ஆனதுல இருந்து நடந்தது எல்லாம் இருக்கு... ம்ம்ம்... படிக்க சுவாரசியமாகவும் இருந்தது,” என்றாள் கிருத்திகா!
தியாகு காதில் கேட்பதை நம்ப முடியாமல் கையில் இருந்த டைரியை புரட்டிக் கொண்டிருந்தான்...
“டாக்டர் இந்த ட்ரீட்மென்ட் சக்சஸ் ஆனால் நடுல நடந்தது எல்லாம் மறந்துப் போக வாய்ப்புகள் அதிகம்னு சொன்னாராம்... அதனால உங்க ஸ்வீட் ஹார்ட் இந்த டைரி எழுதி, கீதாவை என் கிட்ட கொடுக்க சொன்னாளாம்... நீங்க நல்லவர், வல்லவர்ன்னு எனக்கு தெரியன்னு நினைக்கிறேன்...”
“ஓ...” என்ற தியாகுவின் கண்கள் இப்போதும் டைரி மீது தான் இருந்தது!
“ஆனாலும் உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா டிவோர்ஸ் பேப்பரோட வந்து நிப்பீங்க!!!”
கிருத்திகா திடீரென கோபத்துடன் கேட்ட விதத்தில் திகைத்துப் போய் நிமிர்ந்துப் பார்த்த தியாகு,
“அது... கீர்த்தி...” என்று இழுத்தான்...
“வில் யூ எவர் அன்டர்ஸ்டான்ட் மை லவ் ஃபார் யூ?”
தெறித்து விடப் போவதை போல கண்களை விரித்த தியாகு, “கீர்த்தி,” என்றான் நம்ப முடியாமல்!
“என்ன கீர்த்தி??? மர மண்டை... உன்னை பிடிக்காமலா நான் கல்யாணம் செய்துக்கிட்டேன்??? உங்க கிட்ட மனசில இருக்கிறதை சொல்ல முடியாமல் நான் தவிச்சது எனக்கு தானே தெரியும்... அன்னைக்கு அத்தை சொன்னதுல கோபம் வந்தாலும், உன்னோட மனசு விட்டு பேச