(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

“அதெல்லாம் மெதுவா போட்டுக்கலாம்... இப்போ அதுக்கு டைம் இல்லை... நாம லீகலி ஹஸ்பன்ட், ஒய்ஃப்... அது வெறும் அடையாளம் தானே...”

   

“ஆமாம் ராஜ்... ஆனால், நீ எனக்கானவன், நான் உனக்கானவன்னு இருக்க பந்தத்தை காட்டுற ஐடி அது... எனக்கு வேணுமே...”

   

அவள் சிணுங்கவும், மனது கேட்காமல்,

   

“சரி... இப்போ என்ன செய்யனும்???” எனக் கேட்டான் தியாகு.

   

“இந்த ரூம் அலமாரில இருக்க அம்மன் படத்துக்கிட்ட மஞ்சளும், கயிறும் இருக்கும் பாரு...”

   

“புரியுது...” என்றபடி அவளை கீழே இறக்கியவன், அவள் சொன்னபடி அம்மன் படத்திற்கு அருகே இருந்த மஞ்சளை எடுத்து சிறு நூலில் சுற்றி, கிருத்திகாவின் அருகே வந்து,

   

“ப்ளாக் & ஒய்ட் பட எஃபக்ட் கொடுத்தாலும், இது உனக்கான சென்டிமென்ட்டல் தாலி... அம்மன் பக்கத்துல இருந்தே வந்தது, ஸோ பவர் அதிகமா இருக்கும்...” என்றப்படி மூன்று முடிச்சிட்டு கிருத்திகாவின் கழுத்தில் மஞ்சள் கயிறை அணிவித்தான்...

   

“தேங்க்ஸ் டா...”

   

“இந்த வெஜிடேரியன் கூட இல்லாத நோ நான்சென்ஸ் தேங்க்ஸ் எல்லாம் யாருக்கு வேணும்... நீ வா நாம வீட்டுக்கு போய் ஃபுல் நான் வெஜ் செலிபரேட் செய்வோம்...”

   

“ஹ்ம்ம்ம்... செலிபரேஷன் எல்லாம் சரி, ஆனால் நான் நடந்தே வரணுமா????”

   

“ஐயோ, சாரிடா செல்லம்...” என்ற தியாகு, கிருத்திகா விரும்பியதுப் போலவே அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்...

   

“வெளியே எல்லோரும் பார்ப்பாங்களே கீர்த்தி...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.