(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

முடியாம இருக்குறதால வந்த கோபத்தில தான் வீட்டை விட்டுப் போனேன்... ஆனாலும் இந்த டைரில இருக்கிறதை படிச்சப்புறம்... எப்படிடா ராஜ் இப்படி இருக்க???? எனக்கு உன்னை எப்படி பிடிக்காமல் போகும்? இதை எல்லாம் நானே இப்படி விளக்கமா சொன்னால் தான் உனக்கு புரியுமாடா???? நீ நிஜமாவே ஜெம் ராஜ்...”

   

“கீர்த்தி...”

   

“கீர்த்தி... கீர்த்தின்னு கூப்பிடுறதுக்கு ஒரு குறைச்சலும் இல்லை...” என்றப்படி எழுந்து நின்றவள், தியாகு பக்கம் தன் வலது கையை நீட்டினாள்.

   

அவளின் நீட்டிய கையை பிடித்துக் கொண்டு வேகமாக எழுந்த தியாகு சரியாக நிற்கும் முன்பே அவனை இறுக அணைத்துக் கொண்டாள் கிருத்திகா...

   

“இந்த டைரி சொல்லி தான் எனக்கு தெரியனும்னு இல்லை ராஜ்... எனக்கே தெரியும் நீ என் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு... ஐ ஆம் அ ஸ்டுபிட்... நீ வேற பெட் ஜெயிக்குறது, தோக்குறதுன்னு சொல்லவும்... ப்ச்... என்னால என் ஈகோவை விட்டு உன் கிட்ட நேரா பேச முடியலைடா... அன்னைக்கு கார் எடுத்துட்டுப் போனப்போ, என் மேலே, உன் மேலே, அத்தை மேலேன்னு எல்லோர் மேலேயும் கோபமா இருந்தது... அதனால தான் வீட்டுக்கு போகாம, மதுரைல இருக்க கெஸ்ட் ஹவுஸ்க்கு போகலாம்னு அந்த பக்கமா போனேன்... கன்னா பின்னான்னு கோபம் இருந்தது... அதுல சரியா கவனிக்காமல் தப்பா ஒரு டர்ன் எடுத்துட்டேன்... உடனேயே என்ன ஆகப் போகுதுன்னு புரிஞ்சிருச்சு... விழப் போறேன்னு தெரிஞ்சே எதுவும் செய்ய முடியாமல் தான் விழுந்தேன்... அப்போ என்ன நினைச்சேன் தெரியுமா???” என்றப்படி அவனை மேலும் இறுக்கிக் கொண்டாள் கிருத்திகா...

   

அவளை தேற்றுபவனைப் போல தலையை மெல்ல வருடிய தியாகராஜன், “என்ன நினைச்ச???” என மென்மையாக வினவினான்.

   

“உன்னை தான் நினைச்சேன் ராஜ்... உன் கிட்ட என் காதலை சொல்லாமலே சாகப் போறேனேன்னு நினைச்சேன்... எனக்கு மட்டும் மேஜிக் பவர் இருந்தா திரும்ப போய் நடந்தது எல்லாத்தையும் மாத்திடுவேன்னு நினைச்சேன்... கிடைச்ச அத்தனை நாளையும் விட்டுட்டு இப்படி சாவு வரும் போது தானா எனக்கு புத்தி வரணும்னு நினைச்சேன்... ஓ மை காட்... 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.