(Reading time: 7 - 14 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

   

“பாருடா...!” என சொல்லி சிரித்தாலும், மனைவியை இன்னும் அதிகமாக இறுக்கிக் கொண்டு, “என் செல்ல கீர்த்தி... எவ்வளவு நாள் ஹுஹும்... வருஷம் வேஸ்ட்டா போச்சு...” என்றான் தியாகு!

   

“ப்ச்... எல்லாம் நல்லதுக்கு தான் ராஜ்... அந்த நியர் டெத் அனுபவம் தான் வாழ்க்கையில எதையும் க்ரான்ட்டடா எடுத்துக்காம வாழனும்னு எனக்கு சொல்லி கொடுத்துச்சு... அதனால தானே நான் உன் கிட்ட மனசில இருக்கிறதை மறைக்காமல் சொல்றேன்... மத்தபடி நீ ஓவர் ஜென்டில்மேனா நடக்க, நான் மனசுக்குள்ளே அன்பை வச்சுட்டு இருக்க, எப்போ தான் நமக்குள்ளே எல்லாம் சரி ஆகுறது...!”

   

“ஆனாலும் கூட அம்னிசியா பீரியட் வேஸ்ட்டா போச்சே...”

   

“ஐயே இவரை பாருடா... ராஜ் சார், நிலாவா வந்த கிருத்திகாவோட போனது உங்க கோர்ட்ஷிப் பீரியட்... அந்த பீரியட்ல எவ்வளவு லவ் இருந்தாலும், ஆசை இருந்தாலும் லிமிட்டோட இருக்கனும்... எல்லை தாண்டக் கூடாது... அதை தான் நீங்க அனுபவிச்சு என்ஜாய் செய்தீங்க... இப்போ இருக்கிறது ஆஃப்டர் மேரேஜ் பீரியட்...”

   

“ஹேய் அப்போ...”

   

“கஷ்டம்... நீ சரியான லூசு ஹுஹும் பேக்குடா ராஜ்...!”

   

“நான் லூசாவோ பேக்காவோ இருந்துட்டு போறேன்... ஆனால் இதுக்கு மேல ஒரு செகன்ட் கூட வேஸ்ட் செய்ய கூடாது... கீர்த்தி...” என்றப்படி அவளை கையில் அள்ளிக் கொண்டான் தியாகு.

   

அவனின் கழுத்தில் மாலையாக கைகளை போட்டுக் கொண்டவள்,

   

“ராஜ், என் கழுத்துல இப்போ தாலி இல்லைடா...” என்றாள் கொஞ்சம் கொஞ்சலாக...

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.