இப்போ நினைச்சாலும் பயமா இருக்கு... இனிமேல் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்... நீயும் என்னை விட்டுட்டுப் போக கூடாது...”
கிருத்திகா இன்னும் அதிகமாக தியாகுவை இறுக அணைத்துக் கொள்ள, தியாகுவும் அவளை இறுக்கிக் கொண்டான்.
“சரி டா கீர்த்தி... எங்கேயும் போக மாட்டேன்... நீ ரிலாக்ஸ்டா இரு...”
“தேங்க்ஸ்டா ராஜ்... நீ எவ்வளவு நல்லவன்... எனக்கு ஞாபகம் இல்லைனாலும் உன் மனைவியா தானே உன் கூட இருந்தேன்... நீ...”
“ஹேய் கீர்த்தி... ஆக்ச்சுவலி நீ சொல்ற அளவுக்கு எல்லாம் இல்லை... எனக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும்... நீ அம்னீசியால இருந்தா கூட இந்த டைரி மாதிரி ஏதாவது கோல்மால் செய்து என்னை போட்டுக் கொடுத்துருவேன்னு தான் நல்லவனா நடிச்சேன்... மத்தப்படி நீ வந்து அப்படி செல்லம் கொஞ்சினால் நான் சும்மா இருப்பேனா...??? நான் நிஜத்துல உன் கிட்ட ரொம்ப கெட்டவன்... என்னை நம்பு...”
அவனின் பதிலைக் கேட்டு சிரித்தவள், முகத்தை மட்டும் நிமிர்த்தி அவனைப் பார்த்து, “ஹ்ம்ம்...!!!!” என்றாள் பொய் மிரட்டலுடன்!
மறுப்பாக தலை அசைத்த தியாகு, “இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகலை என் கூட வீட்டுக்கு வா, நான் எவ்வளவு கெட்டவன்னு உனக்கு ப்ரூவ் செய்றேன்,” என்றான் கெத்தாக!
“ஹையோ... ஹையோ... என் புத்திசாலி ஹஸ்பண்டே, நீ வர தான் நான் காத்துகிட்டே இருந்தேன்... வா வீட்டுக்கு போகலாம்... இங்கே நமக்கு என்ன வேலை?”
“அட கீர்த்தி! என்ன ஒரு இம்ப்ரூவ்மென்ட்... அப்போ நம்ம முதல் இரவு betல தோத்துப் போக உனக்கு ஓகேன்னு சொல்லு,” என சொல்லி, வேண்டுமென்றே அவளை சீண்டினான் தியாகு!
“நான் தோத்து எல்லாம் போகலை ராஜ்... உனக்காக போனா போகுதுன்னு விட்டுக் கொடுக்குறேன்,” என தன் ஸ்டைலை மெயின்டெயின் செய்தாள் கிருத்திகா.