(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

ஓரளவிற்கு நிலைமையை புரிந்துக் கொண்டிருந்த கீதா, வீணாவை கையை பிடித்து வலுக் கட்டாயமாக அழைத்துச் சென்றாள். இந்து மெதுவாக நடக்க தொடங்கினாள். அங்கே நின்றிருந்த சஞ்சீவை கடந்தவள், நின்று, திரும்பி,

   

“நான் உங்க கிட்ட முன்பே சொல்லி இருக்கேன். என் ஃப்ரென்ட் கிட்ட இது மாதிரி பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இதுவே கடைசி முறையா இருக்கட்டும்...” என்று சற்றே கடுமையாக சொல்லிவிட்டு, கீதாவும், வீணாவும் சென்ற திசையில் சென்றாள்.

   

சஞ்சீவ் ஒரு சில வினாடிகள் சிலையென நின்றான். பின் மெதுவாக அவன் முகத்தில் மலர்ச்சியும், இதழ்களில் புன்னகையும் தோன்றியது. இந்து இதுவரை அவனிடம் மகிழ்ச்சியாக பேசி இருக்கிறாள், அழுதிருக்கிறாள், கவலை பட்டிருக்கிறாள், ஏன் கண்டுக் கொள்ளாமல் கூட இருந்திருக்கிறாள். ஆனால் இது போல் கடினமாக எதுவுமே சொன்னதில்லை... அந்த குரலில் என்ன ஒரு தோரணை? கோபம் என்று சொல்ல முடியாது... உணர்ச்சியே இல்லாத தோரணை தான்! ஆனாலும் ஒருவிதமான அழுத்தமான தோரணை. அதுவும் கூட ஏனோ அவனுக்கு சிறு குழந்தை தன் வயதிற்கு மீறி மிரட்டி போவதாக தான் தோன்றியது. 

   

முகத்தில் மின்னிய புன்னகையுடனே அங்கிருந்து வந்தவன், எதிரில் சற்றே வாடிய முகத்துடன் நிலாவையும், கோபமாக இருந்த நந்தினியையும் பார்த்தான்.

   

“என்ன நிலா மேடம், செம டோஸா?” என்றான் அதே புன்னகையுடன்.

   

நிலா எதுவும் சொல்லாமல் நந்தினியைப் பார்த்தாள். ஒரு விதத்தில் அவளின் வருத்தத்திற்கு தானும் காரணம் என்று சஞ்சீவிற்கு தோன்றியது,

   

“நந்தினி, நிலாவை ரொம்ப திட்டினீங்களா என்ன? இந்து என் மேல இர

{/f90filter}

ுக்கும்...”

   

சஞ்சீவ் பேசி முடிக்கும் முன் குறுக்கிட்ட நந்தினி,

   

“அன்பினால தான் இப்படி செய்திருப்பா, புரியுது சஞ்சீவ், ஆனால், அம்மா, சித்தி, அத்தை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.