தொடங்கி, எத்தனை பேர் கேட்குறாங்க தெரியுமா! என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தானே?” என்றாள் வருத்தத்துடன்.
“நந்தினி, உங்களுக்கு இந்துவை தெரியாதா என்ன? உங்களுக்கு தெரிஞ்சா நடக்காதுன்னு தானே நிலாவை அப்ரோச் செய்திருக்கா, விடுங்க பாவம் நிலா என்ன செய்ய முடியும்?”
“அதுவும் சரி தான்!” என்ற நந்தினி, நிலாவிடம், “சரி நிலா, நீயும் போய் சாப்பிடு போ...” என்றாள்.
நிலா விட்டால் போதுமென அங்கிருந்து செல்லவும், நந்தினி சஞ்சீவிடம், “சஞ்சீவ், நீங்க சாப்பிடலையா?” என வினவினாள்.
“என்ன செய்ய நந்தினி, எல்லோரும் என்னை அம்போன்னு விட்டுட்டு போய்ட்டாங்க,” என்றான் சஞ்சீவ் விளையாட்டாக!
“ரொம்ப ஃபீல் செய்யாதீங்க வாங்க நான் உங்களுக்கு கம்பெனி கொடுக்கிறேன்...”
“தேங்க்ஸ் நந்தினி, ஆனால் சேகர் எங்கே?”
“எங்களுக்குள்ளே எல்லா நேரத்திலும் ஒன்னா சாப்பிடும் ஃபார்மாலிட்டி எல்லாம் இல்லை, அவர் இந்நேரம் சாப்பிட்டு முடிச்சிருந்தாலும் ஆச்சர்யம் இல்லை. ஆமாம் உங்க இந்து எங்கே?”
“வீணா அண்ட் கீதா கூட இருக்கா...”
புன்னகையோடு சொன்ன சஞ்சீவை ஒரு பார்வை பார்த்தாள் நந்தினி!
“அவங்க மூணு பேரும் லக்கி சஞ்சீவ்... அவங்களுக்குள்ளே இருக்க அண்டர்ஸ்டாண
{/f90filter}
்டிங்ன்னு மட்டும் இல்லாமல் ஒவ்வொருத்தரோட ஹஸ்பண்டும் கூட அவங்க நட்பை புரிஞ்சவங்களா இருக்கீங்களே!”
“தேங்க்ஸ் நந்தினி! இந்துவோட ஃப்ரென்ட்ஸ் அவளுக்கு ஃபேமிலி போல தானே!”