பேசியப்படி இருவரும் உணவு உண்ண ஆரம்பித்தார்கள்.
அதே நேரம் சற்று தள்ளி கீதா, வீணாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கண்களை சுழற்றியப் படி அமர்ந்திருந்த இந்துவின் கண்களில் சஞ்சீவும் நந்தினியும் பட்டார்கள். சஞ்சீவின் அன்பில் நூறு சதவிகித நம்பிக்கையும், நந்தினி சேகர் மனம் ஒன்றிய தம்பதியர் என்பதும் தெரிந்து இருந்தப் போதும், இந்துவின் கண்களில் பொறாமை ரேகைகள் தோன்றியது.
அவளின் முக மாற்றத்தை கவனித்து, அந்த பக்கம் பார்த்து விஷயத்தை புரிந்துக் கொண்ட வீணாவும் கீதாவும், அவர்களுக்குள் ஒரு புன்னகையை பகிர்ந்துக் கொண்டனர். இந்துவின் பார்வை இன்னமும் அந்த பக்கமே இருக்க, அவர்கள் இந்துவிடம் பேச விரும்பிய விஷயம் முக்கியமானது என்பதால், கீதா,
“இந்து, நீ சொன்னா தானே எங்களுக்கு புரியும். உங்க இரண்டு பேருக்குள்ளே என்ன பிரச்சனை? சின்னதா இருக்குறது பெரிசாகுற முன்னாடி முன் சரி செய்துடலாம்...” என்றாள்.
பார்வையை திருப்பி தோழிகளை பார்த்த இந்து,
“ப்ச், பெரிசா எதுவும் இல்ல கீதா... அப்படி ஏதாவது இருந்தா நானே உங்க இரண்டுப் பேர் கிட்ட சொல்லி இருக்க மாட்டேனா?” என்றாள்.
“ஒரு ஆறு ஏழு மாசம் முன்னாடி இதை நீ சொல்லி இருந்தா நானும் நம்பி இருப்பேன், ஆனால் வீணாவுக்கு மட்டும் தெரிஞ்சு எனக்கு தெரியாத விஷயங்களே நிறைய இருக்கே...”
“ப்ளீஸ் கீதா, சின்ன விஷயம் எல்லாம் உங்க லெவெலுக்கு எஸ்கலேட்
{/f90filter}
செய்த மாதிரி இருக்க வேண்டாம் தானே? என் கையை மீறி ஏதாவது போகும் போது கட்டாயம் உங்க கிட்ட ஹெல்ப் கேட்பேன்.”
“இந்து, நீ எப்போ இப்படி மாறின?” என்றாள் வீணா.