“நான் மாற எல்லாம் இல்லை வீணா... சரி, நீங்க இரண்டுப் பேரும் எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க. அவினாஷ், ராஜீவ் இரண்டு பேரும் ரொம்ப நல்ல டைப், வைஃப் மேல ரொம்ப அன்பு வச்சிருக்காங்க, எனக்கே தெரியும். ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்குள்ளே ஒரு சின்ன பிரச்சனை கூட வந்ததே இல்லையா? இன்னைக்கு வரைக்கும் நீங்க இரண்டுப் பேரும் அது மாதிரி ஏதாவது சொல்லி இருக்கீங்களா என்ன?“
பதில் சொல்லாமல் மற்ற இருவரும் அமைதியாக இருக்க, இந்துவே புன்னகையோடு தொடர்ந்தாள்.
“இதெல்லாம் சாதாரண விஷயம் தான்... சஞ்சீவ் ராஜீவின் தம்பி என்பதால் இதெல்லாம் உங்க கண்ணுக்கு படுது... அவர் பிஸ்னஸ் புதுசா ஸ்டார்ட் செய்திருக்குறதால அதுல இன்னும் கொஞ்சம் ஃபோகஸ் செய்றார், வேற எதுவும் இல்லை...”
ஒன்றுமே இல்லை என்பது போல் இந்து சொன்னதை கேட்டு கீதாவும், வீணாவும் நம்ப தான் செய்தார்கள்!
“ஓகே இந்து, உங்க இரண்டுப் பேர் விஷயத்தில் நாங்க மூக்கை நுழைக்க விரும்பலை. ஆனால் இடைவெளிகள் சின்னதா இருக்கும் போதே சரி செய்றது நல்லது...” என்றாள் வீணா.
“சரிங்க வீணா பாட்டி...” என்றாள் இந்து சிரிப்போடு.
“ஆமாம், எப்போவும் வார்த்தைக்கு நூறு தடவை கீதா அக்கா அக்கான்னு சொல்வ, இப்போ பேச்சில் அக்கா மிஸ் ஆகுதே ஏன்? “
“அட, அந்த ரகசியம் உனக்கு தெரியாதா?
{/f90filter}
நாம இவங்களை அக்கான்னு கூப்பிட்டா ராஜீவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்காம்...”
“ஏன்???”
“வேறென்ன, அவரோட வைஃப்புக்கு வயசு ஜாஸ்தியான மாதிரி இருக்காம்...”