“ஓ!”
“என்ன பார்க்குறீங்க? ஏழு மணிக்கு மேல மெதுவா தான் எல்லோரும் எழுந்திருப்பாங்க...”
“ஓஹோ!”
“ஆனால் வீணா சிஸ்டர், கவலை படாதீங்க! உங்க கிட்ட கோபமா பேசினதுக்கு பிராயசித்தமா நானே உங்களுக்கு காஃபி போட்டு தரேன்... “
“உங்களுக்கு காஃபி போட தெரியுமா?”
சந்தேகமாக பார்த்த வீணாவை பார்த்து சிரித்து விட்டு,
“பயப்படாதீங்க, நான் யூஎஸ்’ல் தங்கி இருந்தப்போ நானே தான் சமைச்சு சாப்பிடுவேன்... அப்புறம் காஃபி எல்லாம் என்ன, ஜூஜூபி!”
“அப்போ ரொம்ப நல்லதா போச்சு...”
புன்னகையுடன் சஞ்சீவ் சமையலறை பக்கம் செல்லவும், வீணாவும் அவனுடன் சென்றாள்.
“ஆமாம், நீங்க இவ்வளவு காலையில எழுந்து என்ன செய்றீங்க? இந்து எங்கே?”
“மேடம் தூங்குறாங்க... நான் சும்மா வாக் போகலாம்னு வந்தேன்...” என வாயில் வந்த பொய்யை சொன்னான் சஞ்சீவ்!
“ஓகே... நாளைக்கு தானே கோவிலுக்கு போகனும்?
{/f90filter}
இன்னைக்கு என்ன பிளான்?”
“ஸ்பெசிஃபிக்கா எந்த பிளானும் இல்லை...”
பொதுவாக பேசியப்படி, பாலை காய்ச்சி, இன்ஸ்டன்ட் காஃபி பவுடர் கலந்து, சர்க்கரை அளவு