(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

“சஞ்சீவ், நான் ஒரு விஷயம் சொன்னால் கோவிச்சுக்க மாட்டீங்க தானே? உங்க பர்சனல் விஷயம்...”

   

சஞ்சீவ் என்ன என்பது போல் பார்க்க, வீணா பேச்சை தொடர்ந்தாள்.

   

“நேத்து என் கிட்ட பேசினது மாதிரி இந்து கிட்ட பேசாதீங்க... ப்ளீஸ், தப்பா எடுத்துக்காதீங்க... இந்து ரொம்ப சென்சிடிவ்... சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் கூட மனசுல போட்டு குழம்புவா... எப்போதும் எதையும் என் கிட்டேயும் கீதா அக்கா கிட்டேயும் ஷேர் செய்வா. ஆனாலும் நிறைய நாள் சின்ன விஷயத்தை எல்லாம் மனசுல வச்சிருப்பா... இப்போ உங்க இரண்டுப் பேருக்குள்ள என்ன விஷயமோ, இந்து அதை சொல்லனும்னு எல்லாம் நான் எதிர்பார்க்கலை. ஆனால் அவ மனசுல எதையாவது நினைச்சு வருத்தப் படக் கூடாதுன்னு தான் என்னுடைய கவலை... இந்து உங்க மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கான்னு எனக்கு நல்லா தெரியும்... நீங்க இரண்டு பேரும் முதல் நாள் சந்திச்சதுல இருந்தே, பல தடவை இந்து என் கிட்ட தான் வந்து ஐடியா கேட்டிருக்கா... முன்னாடி எந்த கம்பெனிக்காக, கல்யாணம் செய்துக்க்குறதுன்னு நினைச்சாளோ, அதே கம்பெனியை விட்டுக் கொடுத்துட்டு உங்களை கல்யாணம் செய்துக் கிட்டான்னா பார்த்துக்கோங்க... என்ன பார்க்குறீங்க? உங்க வைஃப் என் கிட்ட எதுவும் சொல்லலை சார்... ஆனால் இதை கூடவா என்னால புரிஞ்சுக்க முடியாது? எதை எப்போ கேட்டாலும், பாவம் சஞ்சீவ் தப்பா எடுத்துக்கப் போறார், அவரை ஹர்ட் செய்ய போகுதுன்ற பாராயணம் தானே? இந்து சின்ன குழந்தை மாதிரி சஞ்சீவ்... ரொம்ப கோபம் வரும் ஆனால் இப்போ எல்லாம் ரொம்ப மாறி போயிட்டா... எல்லாம் உங்க மேல இருக்கும் அன்பினால் தான்... நீங்க அவளை புரிஞ்சுக் கிட்டு, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து...”

   

அது வரை அமைதியாக வீணா சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த சஞ்சீவ்,

   

“இல்ல வீணா, இந்து தான் ரொம்பவே எனக்காக விட்டுக் கொடுத்திருக்கா... மாற வேண்டியது நான் தான்... என்

{/f90filter}ன கோபம் வந்தாலும் இந்து கிட்ட கோபமா பேச மாட்டேன் சரியா?” என்று குறுக்கிட்டு சொன்னான்.

   

“இது என்ன இவ்வளவு ஈசியா இவ்வளவு பெரிய வாக்குறுதி கொடுத்துட்டீங்க?”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.