தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 02 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சரத்தின் முகத்தில் மலர்ச்சி பல மடங்காகி இருந்தது!
“அண்ணா???” உதய் புரிந்துக் கொண்டவனாக கேட்கவும்,
"ஆமாம்டா... வீட்டுல போட்டு கொடுத்திராத! உன்னோட வருங்கால அண்ணி நம்ம காலேஜில கம்ப்யூட்டர் சைன்ஸ் டிபார்ட்மென்ட்ல படிக்குறா... இப்போ தர்ட் இயர்," என்றான் சரத் பெருமையுடன்!
"அண்ணா!!!!"
"என்னடா இப்படி அலறுற?"
"கங்க்ராட்ஸ் அண்ணா! ஆனா, நீங்க பொண்ணுங்களை நிமிர்ந்தே பார்க்க மாட்டீங்க.... அப்படி இப்படி... ராமர் அது இதுன்னு எல்லாம் நம்ம குடும்பத்துல பயங்கர பில்ட்-அப் இருக்கே, நீங்க என்ன?"
"அதுக்காக நான் பிரம்மசாரியாவே வாழ முடியுமா?"
"ம்ம்ம்....?"
"உன் அண்ணி ரொம்ப நல்ல பொண்ணுடா... நீ தான் பார்க்க போறீயே.... அப்புறம் நீயே சொல்லு! நம்ம காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்! சும்மா எல்லாம் அங்க இங்கே சுத்த முடியாது. ஃபோனை கையில தொடவே முடியாது! அதனால இவ்வளவு நாளா ஒரே காலேஜ்ன்னு தான் பேரு, ஆனால், கல்ச்சுரல் மாதிரி ஈவன்ட்ஸ் நேரத்துல மட்டும் தான் நாங்க அங்கே பார்க்கவே முடியும். மத்தப்படி வீட்டுல இருந்து ஃமொபைல்ல பேசுறது மட்டும் தான்... அதுவும் அவங்க வீட்டுல அவ அப்பா சீக்கிரமா வந்துட்டா அவ்வளவு தான்!"
"ஓஹோ!"
"இப்போ நீ இருக்குறதால, எனக்கு ஒரு எக்ஸ்ட்ரா அட்வான்டேஜ்!"