சரத் சொன்னது போலவே அதன் அருகே சின்ன நீரூற்று இருந்தது... அதற்கு செல்ல என அமைக்க பட்டிருந்த படிகளில் ஐந்தாறு பெண்கள் அமர்ந்திருந்தார்கள்...
இரண்டுப் பேர் அவனை பார்க்கும் திசையிலும், மற்றவர்கள் அவனுக்கு முதுகு காட்டியபடியும் இருந்தார்கள்...
இவர்களில் சரத் சொன்ன ‘அண்ணி’ யாராக இருக்கும் என்ற கேள்வியுடனும், தயக்கத்துடனும், அங்கே சென்ற உதய்,
"எக்ஸ்க்யூஸ் மீ... நான்... ஃபைனல் இயர் சரத்தோட தம்பி..." என்றான்.
அவர்களில், அதுவரை தலையை குனிந்து புத்தகத்தில் ஆழ்ந்திருந்த ஒருத்தி, சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள்...
இவளாக... இல்லை இல்லை... இவர்களாக இருக்குமோ????
உதய் சந்தேகப்பட அவசியமே இல்லாமல், அவளின் முகத்தில் மெல்லிய நாணத்துடன், மலர்ச்சியும் தெரிந்தது!
சரத் சொன்ன ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் சரியே தான்!
"அண்ணி! என் பேர் உதய்... அண்ணா இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னான்..."
உதய் அண்ணி என்றதும் அவளின் முகத்தில் இருந்த வெட்கம் + மலர்ச்சி இரண்டுமே அதிகமாகின...
"தேங்க்ஸ் உதய்..." என்றபடி வாங்கிக் கொண்டவள், ஏதோ நினைவு வந்தவளாக, தன் பின்னால் அமர்ந்திருந்தவளின், ஜடையை இழுத்து,