"எல்லாம் நடக்கும் தம்பி, நீ போய் தான் பாரேன்..."
"சரி சரி... உனக்காக தான் செய்றேன். ஏதாவது பிரச்சனை வந்தா உன்னை மாட்டி விட்டுருவேன்"
"உன்னை பத்தி எனக்கு அந்த அளவுக்கு தெரியாதா என்ன?"
"சரி அப்போ ஓகே! ஆனால் எப்படி அது மீட் பண்ணவே முடியாத போது உங்களுக்குள்ள லவ்வு?"
"அவளை முதல் டைம் ஃப்ரெஷர்ஸ் பார்ட்டில பார்த்தப்போவே நான் கிளீன் போல்ட்டா..."
உதய்க்கு முன் தினம் மாலையில் பார்த்தவளின் நினைவு வந்தது... அவனும் கிளீன் பவுல்ட் தானோ?!??!!
"முழு லவ் ஸ்டோரி அப்புறம் இன்னொரு நாள் சொல்றேன்..."
சரத்தின் குரலில் மீண்டும் நடப்புக்கு வந்தான் உதய்.
❀✿❀✿❀✿
கல்லூரியில் முதல் நாள் நல்ல விதமாக இருந்தது. பிரின்சிபால் பொதுவான அறிவுரைகள், கல்லூரியின் சட்ட விதிமுறைகளை எடுத்து உரைத்து விட்டு, அவரவர் வகுப்பை கண்டுப்பிடித்து செல்ல சொன்னார்...
முதல் இரண்டு வகுப்புகளும் நல்ல விதமாகவே சென்றது...
சரத் சொன்ன அந்த ப்ரேக் வரவும், அண்ணன் தந்திருந்த லெட்டரை சட்டையினுள் வைத்துக் கொண்டு, லைப்ரரி பக்கம் சென்று, கண்களால் தேடினான் உதய்.