கேட்டு, கலந்து, வீணாவிடம் கொடுத்தான் சஞ்சீவ்.
“ஸாரி வீணா சிஸ்டர்... உங்க கிட்ட அப்படி கோபமா பேசினதுக்கு நான் எந்த சமாதானமும் சொல்ல முடியாது... ப்ளீஸ் பெரிய மனசு செய்து இந்த அடியேனை மன்னிச்சிடுங்க...”
“ம்ம்ம்... உங்களை மன்னிக்குறது யோசிக்க வேண்டிய விஷயம் தான்... ஆனால் சிஸ்டர்ன்னு சொல்லி, இப்படி காஃபி எல்லாம் போட்டு தரீங்க, சரி போனால் போகுது ட்ரை செய்றேன்... ஆனால் சஞ்சீவ் இந்து லக்கி தான்... காஃபி சூப்பர்...”
இந்து பற்றி வீணா சொன்னதில் இளகியவன்,
“இந்து இல்ல வீணா, நான் தான் ரொம்ப லக்கி...” என்றான்.
காஃபி பருகியப் படி அவனை பார்த்த வீணா, அவன் கண்களில் மின்னிய காதலை புரிந்துக் கொண்டு கேலியாக சிரித்தாள்.
“சரி, நீங்க இரண்டு பேரும் லக்கி தான், போதுமா?”
“இல்ல வீணா, இந்துக்கு நான் ஏத்தவன் தானான்னு எனக்கு இன்னும் கூட சந்தேகமா இருக்கு... ஷி இஸ் லைக் அன் ஏஞ்சல்...”
அவன் ஏதோ கனவில் பேசுபவன் போல் பேசவும், வீணா, அதே புன்னகையுடன், அவன் கண் முன் கையை ஆட்டினாள்.
“ஹலோ சஞ்சீவ், எந்த உலகத்துல இருக்கீங்க? பூலோகத்துக்கு வாங்க... உங்க ஏஞ்சல் இங்கேயே தானே இருக்காங்க, இந்த டையலாக் எல்லாம் அவக் கிட்ட போய் சொல்லுங்க...”
அப்படி சொல்ல முடிந்தால
{/f90filter}
் நன்றாக தான் இருக்கும் என மனதில் நினைத்த சஞ்சீவ், பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தான். ஒரு சில வினாடிகள், அமைதியாக கழியவும், ஏதோ யோசனையில் இருந்த வீணா, திடீரென பேசினாள்.