(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

“ஹி ஹி... மாத்திட்டா போச்சு.... முடிஞ்ச அளவு கோபத்தை காட்ட மாட்டேன், சரியா?”

   

“இதோ பாருடா, ஒரு செகன்ட்ல பேச்சை மாத்துறார்! ஆமாம், இவ்வளவு லேட்டா தான் எல்லோரும் எழுந்திருப்பாங்களா? அப்போ டிஃபன் லேட் ஆகுமோ?”

   

“கவலைப் படாதீங்க சிஸ்டர்... ஏழரை எட்டு மணிக்கு எல்லாம் ரெடி ஆகிடும்... இங்கே வீடு எப்படி சேர்ந்து சேர்ந்து இருக்கு பார்த்தீங்களா? எல்லோரும் சொந்தக் காரங்க தான்... இப்போ நாம வந்திருக்கோம் இல்லையா, இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த இடமே அல்லோல படப் போகுது... எல்லோருமா சேர்ந்து சமைப்பாங்க... வேலையும் சீக்கிரம் முடியும், செய்யும் வேலையில அலுப்பும் தெரியாது... உங்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் கிராமத்து டிஷ் வேணும்னா சொல்லுங்க, ஒரு எக்ஸ்பெர்ட் கட்டாயம் இருப்பாங்க...”

   

“நிஜமாவா, எனக்கு ஆப்பம், நாட்டுக் கோழி குழம்பு ரொம்ப பிடிக்கும், கிடைக்குமா?”

   

“இது என்ன கேள்வி, உங்களுக்கு இல்லாததா?”

   

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, பேச்சு சத்தமும், யாரோ நடந்து வரும் சத்தமும் கேட்டது.

   

“என்ன சஞ்சீவ் நீ இங்கே...” என்றப்படி வந்த சரஸ்வதியுடன் இரண்டு இளம் பெண்களும் இருந்தனர்.

   

“இது என்ன கேள்வி பெரியம்மா, அங்கே பாருங்க, பாத்திரம் எல்லாம்... பொண்டாட்டிக்கு ஸ்பெஷல் காஃபி போல...” கூட வந்த புதியவள் கிண்டல் செய்ய,

   

“காஃபி போட்டால் என்ன தப்பு... ஆனால் இது இந்துக்கு இல்லை, அவ ஃப்ரென்ட் இவங்களுக்காக... இவங்க பேர் வீ

{/f90filter}

ணா...” என்றான் சஞ்சீவ்.

   

“ஓஹோ! அவங்கஆஆஆஆஆ ஃப்ரென்டுக்கு எல்லாம் கூட நீங்க தான் காஃபி போடுறதா?” என்று மற்றவளும் கிண்டல் செய்ய, சஞ்சீவ் வாயில் வந்த எதையோ சொல்லி அங்கே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.