அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, எதுவும் சொல்லாமல், பூ பறிக்கும் வேலையை தொடர்ந்தாள் இந்து. சஞ்சீவின் முகத்தில் தானாக புன்னகை மலர்ந்தது. அவளருகில் நெருங்கி நின்றவன்,
“நான் வேணும்னா ஹெல்ப் செய்யவா?” எனக் கேட்டான்.
பல்லைக் கடித்த இந்து, வேண்டாம் என்பது போல் தலை அசைத்தாள்.
அதற்கு மேல் அவளை தொல்லை செய்யாமல் அமைதியாக இருந்தவன், அவள் வேலை முடிந்ததற்கான அறிகுறியாக திரும்பவும்,
“இந்து, நான் உன் கிட்ட பேசனும்...” என்றான்.
அவனை விட்டு சற்றே விலகி நின்று,
“சொல்லுங்க....” என்றாள் இந்து.
அவளின் செய்கையை கண்டு புன்னகைத்த சஞ்சீவ்,
“நான் என்ன செய்தா, என் மேல் உனக்கிருக்க கோபம் போகும்ன்னு சொல்லேன்...” என்றான்.
அது சரி! ‘காப்பி கேட் சஞ்சீவ்’ என மனதில் நினைத்துக் கொண்டவள், நேரில், “எனக்கு கோபம் எல்லாம் இல்லை, நீங்க விஷயத்தை சொல்லுங்க,” என்றாள் கெத்தாக!
“ப்ளீஸ் இந்து... நான் பேசினது, நடந்துக் கிட்டது, கண்டிஷன் போட்டது எல்லாம் தப்பு தான்... ஏதோ கோபத்தில் அப்
{/f90filter}
படி செய்துட்டேன்... அதை எல்லாம் மன்னிச்சிடு... ஐ ஆம் சாரி...”
புன்னகைக்க வேண்டும் என எழுந்த ஆவலை அடக்கிக் கொண்டு, “சரி...” என்று மட்டும் சொன்னாள் இந்து.