அவளின் ஒரு வார்த்தை பதிலை எதிர்பார்க்காத சஞ்சீவ், ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்தான்.
அவனின் குழப்பம் அப்பிய முகத்தை பார்த்து ரசித்து விட்டு, “நான் போறேன்...” என்று சொல்லிவிட்டு திரும்ப எத்தனித்தாள் இந்து. வேகமாக அவளின் வலதுக் கரத்தை பிடித்து நிறுத்தினான் சஞ்சீவ்.
“ப்ளீஸ் இந்து... இன்னைக்கு மனசு விட்டு பேசி நம்ம மனசுல இருக்க வித்தியாசத்தை எல்லாம் சரி செய்துடலாம்... நாளைக்கு கோவில்ல சாமி கும்பிட்டு முடிச்சுட்டு, நம் வாழ்க்கையை சந்தோஷமா தொடங்குவோம்... உனக்கு இன்னும் கோபம் இருந்தா திட்டு, அடி, ஏதாவது செய்... ஆனால் இப்படி அமைதியா மட்டும் இருக்காதே... ப்ளீஸ் இந்து... எனக்கு எல்லாமே நீ தான்...”
“சரி... பேசி முடிச்சாச்சா? நான் போகட்டுமா? கையை விடுறீங்களா?”
இந்துவின் கையை மேலும் இறுக்கமாக பற்றிய சஞ்சீவ், எதுவும் சொல்லாமல் அவள் முகத்தை பார்த்தப்படி நின்றான். ஏற்கனவே மனதின் படபடபடப்பை வெளியில் காட்டாமல் இருக்க முயன்றுக் கொண்டிருந்த இந்து,
“விடுங்க ப்ளீஸ்...” என்று முனுமுனுத்தாள்.
அதற்காகவே காத்திருந்தவனைப் போல சஞ்சீவின் பிடி இன்னமும் இறுகியது.
“ப்ளீஸ் சஞ்... சாரி, ப்ளீஸ்ங்க, கை வலிக்குது விடுங்க... என்னை தேடுவாங்க, நான் போறேன்...”
“அவங்க தேடுறது தான் இப்போ ரொம்ப முக்கியம்... இந்து, ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ....”
{/f90filter}
p>
“நான் புரிஞ்சுக்கனும், அவ்வளவு தானே? புரிஞ்சுக்கிறேன்... இப்போ...”
“ப்ளீஸ் இந்து, எத்தனை ப்ளீஸ் போடுறேன்... கொஞ்சம் மனசு இறங்க கூடாதா? என்ன தான்