(Reading time: 7 - 13 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

கவனித்து விட்டு,

   

“இப்படி ஒரு அழகான பேக்கிரவுண்ட்ல, தேவதை மாதிரி நீ இப்படி அமைதியா வந்தால் எனக்கு என்ன தோணுது தெரியுமா?”

   

இந்து இப்போதும் எதுவும் சொல்லாமல் அமைதியாக வந்தாள்.

   

“முத்து பட ஸ்டைல்ல, இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருன்னு கேட்க தோணுது...”

   

இந்து அமைதியாக இருந்தாலும், அவளையும் மீறி அவளின் கன்னங்கள் சிவப்பு வண்ணம் பூசிக் கொண்டது! அதை கவனித்த சஞ்சீவ், உல்லாசமாக சிரித்தான். அவன் ஏதோ சொல்ல நினைத்தப் போது,

   

“ஹலோ ப்ரதர்! இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை? நீங்க இங்கே என்ன செய்றீங்க?” என்ற வீணாவின் குரலும், தொடர்ந்து,

   

“இது என்ன கேள்வி வீணா, சீதை இருக்கும் இடம் தானே இந்த ராமருக்கு அயோத்தி...” என்ற கீதாவின் குரலும் அவர்கள் இருவரையும் மீண்டும் பூலோகத்திற்கு அழைத்து வந்தது.

   

“அண்ணி, நீங்களுமா? அயோத்தி, மித்திலை, சென்னை, திருநெல்வேலி எதுவா இருந்தாலும், என் இந்து இருக்கும் இடத்துல தான் நானும் இருப்பேன்...” என்ற சஞ்சீவ், இந்து பக்கம் பார்த்து குறும்புடன் கண்ணடித்தான்.

   

“இருப்பீங்க இருப்பீங்க... ஏதோ சீரியஸ் டிஸ்கஷன் நடந்துட்டு இருந்தது போலும், நாங்க வந்து டிஸ்டர்ப் செய்துட்டோமோ?”

   

“இதுக்கு நான்

{/f90filter}

பதில் வேற சொல்லனுமா? உங்களுக்கே தெரியாதா என்ன?”

   

கீதாவும், வீணாவும் கேலியாக சிரிக்க, இந்து சஞ்சீவை பார்த்து முறைத்தாள்... ஹுஹும்... முறைப்பதாக நடித்தாள்!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.