இருந்தாலும் நான் உன் சஞ்சீவ் தானே? ப்ளீஸ்டா செல்லம்... என்னுடைய கண்டிஷன் எல்லாம் வாபஸ் வாங்கியாச்சு... நான் சொன்னது எல்லாம் தப்பு தான்... நீ என்னை சஞ்சீவ், சஞ்சு, வாடா, மக்கு இப்படி எப்படி வேணா கூப்பிடலாம்... நான் எதுவுமே சொல்ல மாட்டேன்.. தோப்பு கரணம் வேணா போடட்டுமா?”
குறும்பாக ஒலித்த அவன் கேள்விக்கு பதிலாக அவன் எதிர்பார்த்த மாற்றம் இந்துவின் முகத்தில் இல்லை.
“பேசி முடிச்சாச்சுனா கையை விடுங்க...” என்று மட்டும் சொன்னாள்.
அவளை ஆர்வத்துடன் பார்த்து,
“எல்லோரும் சொன்னாங்க, உனக்கு ரொம்ப கோபம் வரும்ன்னு... நான் தான் இது வரைக்கும் பார்த்ததில்லைன்னு நினைச்சேன்... என்ன கோபம்? என்ன பிடிவாதம்? ஆனாலும் அது எப்படி இந்து, முகத்தை இப்படி எந்த எக்ஸ்ப்ரஷனும் காட்டாமல் கன்ட்ரோல்ல வச்சிருக்க உன்னால மட்டும் முடியுது?” என்ற சஞ்சீவின் கை அவளின் கரத்தை விடுவித்தது.
கோபமா??? லூசு பையா... என மனதில் சிரித்தவள்... ஆனாலும் அவன் சொன்ன உணர்ச்சியை காட்டாத முகம் சரி தானே என நினைத்துக் கொண்டே, விடுதலையான வலதுக் கரத்தை மடித்துப் பார்த்தாள். சஞ்சீவ் பிடித்து சிவந்திருந்த மணிக்கட்டை கவனித்து விட்டு, ஏதோ முனுமுனுத்தாள்.
“என்னை திட்டுறீயா செல்லம்? ஒன்னும் கேட்கலை, கொஞ்சம் சத்தமா திட்டலாம் தானே?” என்றான் சஞ்சீவ்.
அவள் எதுவும் சொல்லாமல் திரும்பி நடக்க, அவளோடு சேர்ந்து நடந்தான் சஞ்சீவ்.
{/f90filter}
“உன் கோபம் எனக்கு புரியுது இந்து... நான் என்ன செய்தா நீ என்னை மன்னிப்பேன்னு சொல்லு...”
அவள் அப்போதும் பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நடந்தாள். அவளின் மௌனத்தை