கீதா அதில் எல்லாம் டைவர்ட் ஆகாமல், “இப்போ நான் கடைக்கு போகனுமே, கண்மணிக்கு இங்கே இருக்க கடை பத்தி எல்லாம் தெரியும், அவளை கேட்டுப் பார்க்கலாம்,” என்றாள்!
சொன்னதுப் போலவே, கீதா கண்மணியை தேடி கண்டுபிடித்து, ஜங்ஷனில் எந்த கடையில் ரெடிமேட் ப்ளவுஸ் கிடைக்கும் என தெரிந்துக் கொண்டாள். பின், அவசரமாக, ராஜீவை கண்களால் அழைத்தாள். அடுத்த வினாடி அவளருகில் வந்து நின்றான் ராஜீவ்!
நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வீணா, “அம்மாடியோ, என்ன சூப்பர் சிக்னல்டா... இந்த லாங்குவேஜ் பேர் என்ன ராஜீவ்? யார் கண்டுபிடிச்சது இது? எங்கே கத்துக்கிட்டீங்க?” என ராஜீவையும் வம்புக்கு இழுத்தாள்.
“வேற யார் எனக்கு சொல்லி தர முடியும் வீணா, எல்லாம் உன்னுடைய அழகு ஃபிரென்ட் சொல்லிக் கொடுத்தது தான்,” என்றான் ராஜீவ்!
“இந்த சாக்குல கீதா அக்காவை வேற செல்லம் கொஞ்சியாச்சா? சரியான ஆள் தான் நீங்க!”
“நான் ராஜீவ், ஆனால் என் வைஃப் உனக்கு அக்காவா?”
“கேள்வி பட்டேன், அக்கான்னு கூப்பிடக் கூடாதுன்னு சொன்னீங்களாமே... ஆனால் என்ன செய்ய ராஜீவ் எனக்கு கீதா அக்காவை, அக்கான்னு கூப்பிட்டு பேசலைன்னா ஏதோ மாதிரி இருக்கும்... அக்கா, அக்கான்னு கூப்பிட்டா தான் மனசுக்கு பிடிக்குது.... நீங்க என்ன நினைக்குறீங்க கீதா அக்கா?”
வேண்டுமென்றே அக்கா அக்கா என்று சொல்லி ராஜீவை கடுப்பேற்றிய வீணாவை பார்த்து புன்னகைத்த கீதா,
“சரி, சரி, அந்த பஞ்சாயத்தை எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். வாங்க ராஜீவ
{/f90filter}
், நாம அவசரமா கடைக்குப் போகனும்... கார் சாவி உங்க கிட்ட இருக்கு தானே?” என்றாள்.
ராஜீவ் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்துக் காட்டவும், “சரி வீணா, இந்து பை... அத்தை