அரவம் கேட்டு, அவசரமாக தூங்குவதுப் போல கண்களை மூடி பாசாங்கு செய்தான்.
இந்து முடிந்த அளவில் சத்தம் எழுப்பாமல் தான் உள்ளே வந்தாள். தூங்கிக் கொண்டிருந்த சஞ்சீவை பார்த்துக் கொண்டே ஒரு சில வினாடிகள் நின்றாள். அவனை அவள் இப்படி நிதானமாக நின்று பார்த்தே மாதங்களாகி விட்டதே!!!
வேறு யாரிடமும் ஏற்படாத ஈர்ப்பு இவனிடம் ஏற்பட காரணம் என்ன? சஞ்சீவை சந்தித்த முதல் நாளே அவளின் மனதில் ஏற்பட்ட சஞ்சலத்தை மறைக்க தோழிகளிடம் பொய் சொன்னது அவளுக்கு நினைவில் வந்தது.
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயமாகின்றன என்று சொல்வது உண்மை தானோ? இல்லை என்றால் ஒவ்வொரு நாளும் எத்தனையோ ஆண்களை சந்திக்க நேர்ந்தாலும் சஞ்சீவிடம் மட்டும் அவளின் மனம் செல்ல காரணம் வேறு என்ன?
மனதில் இதை யோசித்தப் படியே, கட்டிலில் இருந்த இரண்டு போர்வைகளில் ஒன்றை எடுத்து சஞ்சீவின் தூக்கம் கலையாத வண்ணம் போர்த்தி விட்டாள் இந்து. பின் ஒரு புன்சிரிப்போடு, அங்கே இருந்த மற்ற போர்வையை எடுத்துக் கொண்டு, சற்று தள்ளி தரையில் விரித்து விட்டு, விளக்கை அணைத்து விட்டு படுத்தாள்.
🌼🌸❀✿🌷
மேலும் சில நிமிடங்கள் தூங்குவதுப் போல பாவனை செய்த சஞ்சீவ், மெதுவாக இந்து சென்ற பக்கம் திரும்பி பார்த்தான். திறந்திருந்த ஜன்னல் வழி வந்த மெல்லிய நிலவொளியில் அவள் அழகிய பதுமையாக தரையில் படுத்திருப்பது தெரிந்தது. அவனுள் ஏதோ வலித்தது... இவள் ஏன் இப்படி இருக்கிறாள்? ஒருவேளை அவனை மொத்தமாக வெறுத்து விட்டாளா?
வெறுத்திருந்தால் போர்வையை
{/f90filter} போர்த்தி விடுவாளா??? புரியாமல் குழம்பியவன், மீண்டும் இந்துவைப் பார்த்தான்...
பாவம்... இந்த குளிரில் இப்படி படுத்து எப்படி தூங்குவாள்? அவள் அவனுக்கு போர்த்தி விட்ட