(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

கேட்டா சொல்லுங்க, நாங்க சீக்கிரம் வந்திருவோம்...” என்றுக் சொல்லிக் கொண்டே ராஜீவின் கையை கிட்டத்தட்ட கீதா இழுத்துச் செல்வதைப் பார்த்த இந்து, வீணாவின் முகம் மலர்ந்தது.

   

“சீக்கிரம் வர ஆளைப் பாரு... ஒரு பத்து மணிக்கு வந்தா ஆச்சர்யம் தான்,” என்றாள் வீணா!

   

“உனக்கு எப்படி தெரியும் வீணா? கீதா அக்கா, ராஜீவை இழுத்துட்டு வந்தாலும் வந்திருவாங்க,” என்றாள் இந்து!

   

“அதெல்லாம் நடக்கவே நடக்காது,”

  

“அதையும் பார்ப்போம்...” என தொடங்கி அவர்கள் இருவரும் அரட்டையை தொடர்ந்தார்கள்...

   

ஆனால் நேரம் செல்ல செல்ல இந்துவின் மனதில் அன்றைய இரவை நினைத்து சஞ்சலம் ஏற்பட்டது. முந்தைய நாள் இரவு சஞ்சீவ் சொன்னதுப் போல தினம் தினம் அவன் வெளியில் சென்றி தூங்க முடியாதே! நேற்று பயணக் களைப்பில் எல்லோரும் தூங்கி விட்டார்கள், இன்று அப்படி இல்லையே... 

   

சஞ்சீவ் இப்போது மீண்டும் அவளுடைய பழைய சஞ்ஜீவாக மாறி விட்டது அவளுக்கு தெளிவாகப் புரிந்தது. தோட்டத்தில் அவன் பேசியவற்றை நினைத்து அவள் இதழ்களில் புன்னகை தோன்றியது. இவன் தான் அவளுடைய சஞ்சீவ்... அவள் விரும்பிய சஞ்சீவ்! 

   

அவள் விரும்பாத எதையும் அவளுடைய சஞ்சீவ் செய்ய மாட்டான்... ஆனால்... விரும்பாததை தானே! அவனின் அருகாமையை அவள் எப்படி விரும்பாமல் இருக்க முடியும்...

   

மற்றவர்கள் பேச்சை கவனிப்பதாக பாவனை செய்துக் கொண்டு, தன் கனவுலகில், தன் குழப்பத்தில், சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் இந்து. இரவு உணவு முடித்த பின், கீதாவும் ராஜீவும் வந்த பிற்கு தூங்கப் போவதாக சொல்லி நேரத்தை கடத்தினாள். வீண

{/f90filter}ாவும் அவளுக்கு கம்பெனி கொடுத்தாள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, பதினோரு மணி அளவில் ராஜீவுடன் வந்த கீதா, தோழிகள் இருவரும் அவளுக்காக காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப் போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.