(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அர்ச்சனாவும், லக்ஷ்மியும் அங்கே வந்தார்கள். அதை கவனிக்காமல்,

   

“என்ன வீணா நீயும் இப்படி சொன்னா எப்படி? உன் ஃப்ரென்டை பத்தி உனக்கே தெரியாதா? இந்துக்கு ரொம்ப எல்லாம் புடவை கட்டி பழக்கம் இல்லை தானே?” என மருமகளுக்கு சப்போர்ட் செய்தாள் காஞ்சனா!

   

“அடடா....” என வீணா கேலி செய்ய,

   

“இல்லை காஞ்சனா, வீணா சொல்றது சரி தான்...” என்றாள் அர்ச்சனா! அப்படியே, “கீதா, அந்த புடவையை இப்படி கொடு,” எனக் கேட்கவும், கீதா ஒரு வார்த்தையும் பேசாமல் கையிலிருந்த சேலையை அர்ச்சனாவிடம் கொடுத்தாள்.

   

அதை வாங்கி இந்து பக்கம் நீட்டிய அர்ச்சனா, “இந்து, போ... போய் நல்ல பொண்ணா இந்த புடவையை கட்டிட்டு வா...” என்றாள் கண்டிப்புடன்.

   

“அம்மா!!!” என சிணுங்கிய இந்து, “பாருங்க அத்தை இந்த அம்மாவை..” என அர்ச்சனா நீட்டிய சேலையை வாங்காமல், மீண்டும் காஞ்சனாவின் தோளை அணைத்து சிணுங்கினாள். 

   

இந்துவின் கன்னத்தை வாஞ்சையுடன் வருடிய காஞ்சனா,

   

“அர்ச்சனா, ஏன் எல்லோருமா அவளை தொல்லை செய்றீங்க? அவ இஷ்டம் போல வரட்டும்...” என்றாள்.

   

“காஞ்சனா, நீ அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்குற... இந்து, நான் சொல்றதை கேட்பீயா இல்லையா? எனக்கு ஒரே வார்த்தைல பதில் சொ

{/f90filter}

ல்லு...”

   

“அம்மா...” கெஞ்சலாக இழுத்த இந்துவை பார்த்து முறைத்து விட்டு,

   

“இதெல்லாம் என் கிட்ட வேண்டாம். சரின்னா, இதுக்கு மேல நான் ஏதாவது சொல்வேன், 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.