“ஹுஹும்ம்ம்ம்... கீதா கிட்ட கேட்டு பார்த்தேன், அவளுக்கும் தெரியலை, சும்மாவே அப்படி தான்னு நினைக்கிறேன்...”
“சும்மா எல்லாம் இல்லை காஞ்சனா, அதுக்கு பின்னாடி இருக்க விஷயம் பத்தி எனக்கும் அர்ச்சனாக்கும் ஒரு ஊகம் இருக்கு... நீயும் இப்போ எங்க ஃப்ரென்ட் தானே, உன் கிட்டேயும் சொல்லலாம் தப்பில்லை...”
“இப்போ எதுக்கு இதெல்லாம்?” என்றாள் அர்ச்சனா.
“இருக்கட்டும், நம்ம காஞ்சனா தானே? காஞ்சனா, வசந்தி ரொம்ப எல்லாம் மோசம் இல்லை, ஓரளவுக்கு நல்ல டைப் தான்... இப்போ இருக்க வீட்டுக்கு அர்ச்சனா ஃபேமிலியும், வசந்தி ஃபேமிலியும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் குடி வந்தாங்க... கீதாவுடைய அப்பா கிருஷ்ணனை எங்களுக்கு முன்னாடியே தெரியும், அவருக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி அர்ச்சனா கிட்ட அவளை பிடிச்சிருக்குன்னு சொல்லி, அவரை கல்யாணம் செய்துக்க சம்மதமான்னு கேட்டார்...”
“அப்படியா?”
“ம்ம்ம்... அதெல்லாம் பழைய கதை, மனுஷர் கல்யாணமாகி குழந்தையோட தானே இந்த வீட்டுக்கு வந்தார் வாயை மூடிட்டு சும்மா இருந்திருக்கலாம் தானே? ஒரு தடவை, ஃபிளாஷ்பேக் சொல்றேன் பேர்வழின்னு இதை சொல்லி, அர்ச்சனா அவரை சில பல காரணம் சொல்லி திருமணம் செய்துக்க முடியாதுன்னு சொன்னதையும் சொன்னார்...”
“அடடா!”
“ம்ம்ம்... அது தான்! சரவணன், கொஞ்சம் நல்ல டைப், புத்திசாலி, இதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கலை. ஆனால் வசந்தி அது முதல் அர்ச்சனா கிட்ட பேசுறதி
{/f90filter}ல்லை, இந்து கிட்டேயும் நல்ல விதத்துல் நடந்துப்பது இல்லை... அர்ச்சனா வேண்டாம்ன்னு சொன்னதால தான் கிருஷ்ணன் அவங்களை கல்யாணம் செய்துக் கிட்டார்ன்னு அவங்களுக்கு தோணி இருக்கும் போலருக்கு...