“ம்ம்ம்... கீதா, உன்னை போல நல்ல மருமகள் கிடைச்சா அப்புறம் அந்த குடும்பத்துல வேற என்ன வேணும்? இங்கே இப்போ உன் அம்மாவும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்...” என லக்ஷ்மி எதார்த்தமாக சொல்ல, கீதாவின் முகம் சட்டென ஒளி இழந்தது. ஆனாலும் உடனேயே தன்னை சுதாரித்துக் கொண்டவள், ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தாள்.
மேலும் சில நிமிடங்கள் நேரம் பேசி விட்டு, பெரியவர்கள் மூவரும் கிளம்பி கார் பக்கம் சென்றார்கள்.
“உனக்கு என்ன பேசுறதுனே தெரியலை லக்ஷ்மி, கீதா கிட்ட போய் அவ அம்மா பத்தி பேசினா என்ன அர்த்தம்?” என்று ஆதங்கப் பட்டாள் காஞ்சனா.
“நான் உன்னை கேட்க நினைச்சா, நீ என்னை கேட்கிற! கீதாக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் மேல ஆச்சு, இன்னமும் உனக்கு என்ன கோபம்? இந்து போல தானே கீதாவும்? அவளுக்கும் அவ அம்மா அப்பா வீட்டுக்கு வந்து போகனும்னு ஆசை இருக்காதா?”
“தெரியும் லக்ஷ்மி, நான் என்ன செய்ய? கீதாவோட அம்மா ஒரு டைப். நான் அவங்க யாரையும் வர வேண்டாம்ன்னு எல்லாம் சொல்லலை. கீதா ராஜீவ் வெட்டிங் அனிவேர்சரிக்கு கூட எல்லோரும் வந்திருந்தாங்களே... அவங்க பேச்சு சரி இல்லைப்பா...”
“ம்ம்ம்ம்...”
“இந்து சஞ்சீவ் விஷயம் பத்தி எனக்கு சந்தேகம் இருந்தாலும், எனக்கு விஷயம் சொன்னது, இல்ல இல்ல என் கிட்ட போட்டுக் கொடுத்தது கீதாவோட அம்மா தான்... ஆனால் அவங்க அதை சொன்ன விதம் ரொம்ப தப்பா இருந்தது... இந்துவை பத்தி தப்பா சொன்னாங்க... நான் இதை எல்லாம் கீதா கிட்ட சொல்லலை. ஆனால், அதுக்கு மேல அவங்களோட ரொம்ப சொந்தம் கொண்டாடவும் பிடிக்கலை... என்னென்னா என்ன, அவ்வளவு தான்...”
“புரியுது..
{/f90filter}. ஆனால் காஞ்சனா, நீ இவ்வளவு சீரியசா பேச வேண்டாம்... எங்க இரண்டு பேருக்கும் கீதாவோட அம்மா வசந்தியைப் பத்தி நல்லாவே தெரியும்... அவங்களுக்கு இந்து மேல ஏன் அப்படி கோபம்னு உனக்கு தெரியுமா?”