இல்லைன்னா, இதுக்கு மேல உன் விஷயத்துல தலை போட மாட்டேன்...” என அர்ச்சனா சற்றே அழுத்தமாக சொல்லவும், இந்துவின் முகம் வாடிப் போனது, அர்ச்சனாவின் கையில் இருந்த புடவையை வாங்கி விட்டு,
“சரிம்மா, நான் சாரீயே கட்டுறேன்...” என்று சொல்லி விட்டு அறையின் உள்ளே சென்றாள்.
இந்துவின் முகம் மாறிய தினுசில் கீதாவிற்கே பாவமாக இருந்தது, தேவையே இல்லாமல் அவளை மூட் அவுட் செய்து விட்டோமோ என்று கவலையாக இருந்தது.
“பாவம் ஆன்ட்டி இந்து, நீங்க இவ்வளவு ஹார்ஷா சொல்லி இருந்திருக்க வேண்டாம்... அவ முகமே வாடிப் போச்சு...”
“என்ன செய்ய கீதா, நீ கஷ்டப்பட்டு அலைஞ்சு திரிஞ்சு இவளுக்காக எல்லாம் வாங்கி வந்திருக்க... யாராவது ஒருத்தர் அவக் கிட்ட கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருக்கனும்ல? காஞ்சனாவும் இப்படி செல்லம் கொஞ்சினால், அப்புறம் அவ யார் பேச்சையும் கேட்க மாட்டா...”
அர்ச்சனாவின் பேச்சின் முதல் பகுதியை மட்டும் வைத்து, “கஷ்டப்பட்டு? யாரு இவங்க? இந்துக்காக? என்ன அநியாயம்டா இது?” என வீணா போலியாக வியக்கவும், கீதா மெதுவாக அவள் கைகளில் கிள்ளினாள்.
“யாரு அம்மா, யாரு மாமியாருனே தெரியலை, எல்லாம் தலை கீழே நடக்குது இங்கே...” என்றாள் லக்ஷ்மி.
“இந்து சின்ன பொண்ணு தானே லக்ஷ்மி? என்னுடைய சின்ன மருமகள் இல்லையா?” என்று சின்ன என்ற வார்த்தையில் அழுத்தம் கூட்டி சொன்னாள் காஞ்சனா.
“அத்தை, அவ சும்மாவே சின்ன குழந்த
{/f90filter}
ை மாதிரி அடம் பிடிக்குறா? நீங்க இப்படி எல்லாம் சொல்றது தெரிஞ்சா அவ்வளவு தான்...” என்று சிரிப்புடன் சொன்னாள் கீதா.
மற்றவர் முகத்திலும் புன்னகை தோன்றியது,