தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 06 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
உதயுடன் சென்றாலும் பல முறை திரும்பி பார்த்து துளசிக்கு கை அசைத்து விட்டு சென்றான் சரத்.
இதை எல்லாம் பார்க்காதது போல் பார்த்துக் கொண்டிருந்த உதய்க்கு சிரிப்பு வந்தது.
காரில் அமர்ந்த சரத், உதய் முகத்தில் இருந்த புன்னகையை பார்த்து விட்டு,
"போதும்டா இளிச்சது, வண்டியை கிளப்பு," என்றான்.
"நான் ஸ்டார்ட் செய்றேன், உனக்கு டாட்டா காட்டினது போதுமா? வேணும்னா இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துக்கோ...."
"சொல்லுவடா..." என்ற போதும், சரத் திரும்பி வாயிலில் நின்றிருந்த மனைவியை பார்த்து கை அசைத்தான்.
இது 'முடிவே இல்லாத' விஷயம் என்பதை ஒரு வழியாக புரிந்துக் கொண்ட உதய், காரை கிளப்பினான்.
❀✿❀✿❀✿
கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருந்து விட்டு வீட்டின் உள்ளே சென்ற துளசி, காமாட்சியிடம் சென்று,
"அத்தை சாப்பிடலாமா? நான் ரயில்வே ஸ்டேஷன் போய் என் ஃப்ரென்டை பிக்-அப் செய்யனும், இப்போ சாப்பிட்டு கிளம்பினால் தான் சரியா இருக்கும்," என்றாள்.
"சரி சாப்பிடலாம்..." என காமாட்சியும் ஏற்றுக் கொள்ள, இருவரும் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு சாப்பிட தொடங்கினார்கள்.
"யாரு துளசி இந்த ஃபிரென்ட்? எனக்கு தெரியுமா?"