"எப்படி அத்தை நீங்க மட்டும் இப்படி இருக்கீங்க? உங்க ஒரே மகனை உங்க கிட்ட இருந்து பிரிச்சவளா எப்படி என்னை பார்க்காம இருக்க முடியுது?"
"இது என்ன கேள்வி கண்ணா? நீ சரத்தை என் கிட்ட இருந்து எப்போ பிரிச்ச? அவனை விழுந்து விழுந்து கவனிச்சுக்குற... அவனை நல்ல படியா பார்த்துக்குற... வேற என்ன வேணும் எனக்கு? என் மகனோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்."
"ஆனாலும் கூட..."
"துளசி, நாம நடந்துக்குறது போல தான் எல்லாமே நடக்கும்... நீ என்கிட்டே யாரோ ஒருத்தங்கன்ற மாதிரியா நடந்துக்குற, அம்மா போல ஒரு நல்ல ஃப்ரென்ட் போல நடந்துக்கலையா, அதே போல தான் நானும். எனக்கு நீயும் சரத்தும் வேற வேற இல்லை.. இரண்டு பேரும் என் செல்லங்க..."
"தேங்க்ஸ் அத்தை..."
"சரி சரி செண்டிமென்ட் எல்லாம் தூக்கி போடு, வா கிளம்புவோம்... ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வரா... ஆமாம் உன் ஃப்ரென்ட் எவ்வளவு நாள் நம்ம வீட்டில தங்கப் போறா?"
"ஒன்னு இரண்டு வாரம் இருப்பான்னு நினைக்குறேன். நல்ல ஹாஸ்டலா பார்த்துட்டு கிளம்பிடுவா..."
"ஓஹோ... சரி, நீ போய் ரெடி ஆகு... நான் சாஹித்யா குட்டி எழுந்துட்டாளான்னு பார்க்குறேன்..."
துளசியும் சொன்னதை ஏற்றுக் கொண்டு கிளம்பி தயாராக சென்றாள்.
❀✿❀✿❀✿